
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக நாளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிங்கப்பூர் செல்கிறார்.
உள்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளும் முதலமைச்சருடன் செல்கின்றனர். சிங்கப்பூர் தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரன், சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் உள்ளிட்டோரை முதல்வர் சந்திக்கிறார். தொடர்ந்து சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களையும் முதல்வர் சந்திக்கிறார். நாளை மாலை சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டிலும் முதலமைச்சர் பங்கேற்கவுள்ளார்.
Tags:
#தொழில்முதலீடு
# சிங்கப்பூர்
# முதல்வர்
# முகஸ்டாலின்