
தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க 2 பெண் போலீசார் நியமனம் செய்யப்பட்டனர். கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு 9 மோப்ப நாய்கள் உள்ளன.
ஒரு மோப்ப நாய் ஓய்வு பெற்றது. புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என்ற 8 மாத மோப்ப நாய் குட்டி உள்ளது. போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் இதுவரை ஆண் போலீசார் மட்டுமே பயிற்சி அளித்து வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் பயிற்சி அளிப்பதற்காக கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா, தேனியை சேர்ந்த பவானி ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மோப்ப நாய்களுக்கு குற்றம், போதை பொருட்கள் கண்டறிய பயிற்சி அளித்து வருகின்றனர். மோப்ப நாய் பிரிவில் இவர்களுக்கு 45 நாட்களுக்கு முதல் கட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது இரு பெண் போலீசாரும் மோப்ப நாய்களுக்கு உணவு வழங்கி கமெண்ட் கொடுத்து வருகின்றனர். முதலில், பெண் போலீசாரின் உத்தரவுகளை மோப்ப நாய்கள் கண்டுகொள்ளவில்லை. உணவு வழங்கியும், வாக்கிங் அழைத்து சென்றும் அதனுடன் நட்பு ஏற்படுத்தினர்.
Tags:
#மோப்பநாய்பிரிவு
# பெண்போலீசார்
# குற்றம்
# போதைபொருட்கள்