
மாநகர பேருந்தில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் 5 கிலோ பொருளை எடுத்து செல்ல கட்டணமில்லை:
* மாநகர பேருந்துகளில் பயணி ஒருவர் 5 கிலோ எடை வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
* 5 முதல் 20 கிலோ வரை எடையுள்ள பொருட்களுக்கு சுமை கட்டணமாக ரூ.10 அல்லது ஒரு பயணிக்கான கட்டணம் வசூலிக்க வேண்டும்.
* அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை ஏற்ற அனுமதிக்க கூடாது.
* பயணிகள் இல்லாத சுமைகளை மாநகர பேருந்தில் ஏற்ற அனுமதிக்கக் கூடாது.
* செய்தித்தாள்கள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல முன் அனுமதி பெற வேண்டும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
Tags:
#மாநகரபேருந்து
# ஓட்டுநர்கள்
# நடத்துநர்கள்
# போக்குவரத்துத்துறை