
டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறிய பாஜக எம்.பி. மீது அக்கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின்போது போராட்டம் நடத்தியவர்களை இழுத்துச் சென்று கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே, கைது நடவடிக்கை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
Tags:
#மல்யுத்தவீராங்கனைகள்
# பாலியல்புகார்
# முகஸ்டாலின்