'விடுதலை பார்ட் 2' படத்தின் தற்போதைய நிலைமை என்ன.?: வெளியான மாஸ் அப்டேட்.!

'விடுதலை பார்ட் 2' படத்தின் தற்போதைய நிலைமை என்ன.?: வெளியான மாஸ் அப்டேட்.!
By: TeamParivu Posted On: November 27, 2023 View: 54

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் 'விடுதலை பார்ட் 2'. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படத்தின் ஷுட்டிங் தற்போது முழு வீச்சில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 'விடுதலை பார்ட் 2' படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல்


விடுதலை பார்ட் 2
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகள் சார்ந்த படங்களை இயக்கி வெற்றி கண்டு வருபவர் வெற்றிமாறன். கடைசியாக இவரது இயக்கத்தில் 'விடுதலை பார்ட் 1' படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து இருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
கோலிவுட் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் வெற்றிமாறன். கடைசியாக சூரி நடிப்பில் விடுதலை முதல் பாகத்தை இயக்கி இருந்தார். இப்படம் வசூல் மற்றும் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பினை பெற்று இருந்தது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக காமெடியனாக நடித்து முன்னணி நடிகராக வலம் வந்த சூரியை 'விடுதலை' படம் வாயிலாக ஹீரோவாக அறிமுகமாக்கினார் வெற்றிமாறன். கான்ஸ்டபிள் குமரேசனாக சூரி நடித்த இப்படத்தில் வாத்தியார் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். தனது வழக்கமான பாணியில் இப்படத்தையும் சமூக அக்கறை கொண்ட படைப்பாக இயக்கியிருந்தார் வெற்றிமாறன்.


'விசாரணை' போலவே 'விடுதலை பார்ட் 2' படத்தினையும் காவல்துறையின் கோர முகத்தை தோலுரித்து காட்டும் விதமாகவும், எளிய மக்கள் மீது அதிகாரத்தில் இருப்பவர்கள் நடத்தும் அடக்குறை குறித்து பேசும் விதமாகவும் இயக்கி இருந்தார் வெற்றிமாறன். கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் வெற்றிமாறன்.
இந்நிலையில் இப்படத்தின் ஷுட்டிங் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தீவிரமாக நடந்து வரும் 'விடுதலை 2' படத்தின் படப்பிடிப்பு இன்னமும் 30 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் ஷுட்டிங் விரைவில்
முழுமையாக நிறைவடைந்து கோடை விடுமுறையில் படம் ரிலீசாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..