மாயம் இல்லே.. மந்திரம் இல்லே'.. நொடிப் பொழுதில் காணாமல் போகும் பணம்!

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே'.. நொடிப் பொழுதில் காணாமல் போகும் பணம்!
By: TeamParivu Posted On: November 27, 2023 View: 51

கண் இமைக்கும் நேரத்தில் வங்கிக் கணக்கில் இருந்து காணாமல் போன ஒரு லட்சம் ரூபாய்.. எங்கு போனது அந்தப் பணம்.. நடந்தது என்ன? உங்களுக்கும் அது நடக்கலாம்.. தப்பிக்க என்ன வழி?


இன்றைய காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்யலாம், யாருக்கு வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். டிக்கெட் புக்கிங் செய்யலாம். இதுபோன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டன. அதேநேரம், இதன் வாயிலான மோசடிகளும் அதிகரித்து விட்டன.

நம்முடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நொடிப் பொழுதில் நமக்கே தெரியாமல் திருடிவிடுகின்றனர். பெரும்பாலும் OTP நம்பரை பகிர்வது அல்லது முன்பின் தெரியாத லிங்க்குகளை கிளிக் செய்வது போன்ற மோசடிகள் தான் பரவலாக உள்ளன. எனினும் மக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால் புதிய புதிய வழிகளைக் கண்டுபிடித்து மோசடியாளர்கள் நம்முடைய பணத்தை திருடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சைபர் காவல்துறை மட்டுமல்லாமல், இந்திய ரிசர்வ் வங்கியும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பலமுறை வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. இருப்பினும், எந்த லிங்க்கையும் கிளிக் செய்யாமல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும்போது என்ன செய்வது? நீங்கள் கிளிக் செய்யுமாறு மெசேஜ் எதுவும் வரவில்லை; ஆனால் டிஜிட்டல் வாலட்டில் இருந்து ரூ.1 லட்சம் திருடப்படுகிறது. அப்போது என்ன செய்வீர்க?


OTP, லிங்க் அல்லது மெசேஜ் இல்லாமல் அக்கவுண்ட்டிலிருந்து எப்படி பணத்தை எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது உங்களுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கலாம். இதுபோன்ற ஒரு வழக்கு சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடகாவில், ஒரு பெண்ணின் டிஜிட்டல் வாலட்டில் இருந்து ரூ.1 லட்சம் திருடப்பட்டது. இந்த மோசடியில் அந்தப் பெண்ணுக்கு OTP அல்லது இணைப்பு எதுவும் வரவில்லை.

கர்நாடகாவில் 43 வயது பெண் ஒருவரின் ஆன்லைன் மோசடி வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனக்கு எந்த லிங்கோ, OTP நம்பரோ வரவில்லை என்றும், ஆனால் தனது டிஜிட்டல் பேமெண்ட் கணக்கிலிருந்து பணம் அனுப்புவதாகக் கூறி, தனது டிஜிட்டல் வாலட்டில் இருந்து ரூ.1 லட்சம் திருடப்பட்டதாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கூறுகிறார்.

அந்தப் பெண்ணின் தந்தையின் நண்பர் என்று கூறிக்கொண்டு இணைய மோசடி செய்பவரிடமிருந்து அந்தப் பெண்ணுக்கு அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இது மோசடி என்று தெரியாமல் இந்த ஃபிஷிங் மோசடியில் சிக்கி, அவரது கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் திருடப்பட்டது. நவம்பர் 22ஆம் தேதிதான் இந்த மொசடி நடந்துள்ளது.

அந்தப் பெண் பணத்தை இழந்த ஒரு மணி நேரத்திற்குள் புகார் அளித்ததாகவும், தனது கணக்கையும் முடக்க காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும் கூறுகிறார். இதுபோன்ற வழக்குகள் தற்போது பரவலாக காணப்படுகின்றன. இது சைபர் குற்றத்தின் புதிய போக்காகத் தெரிகிறது. அந்தப் பெண்ணின் UPI ஐடியைப் பயன்படுத்தி மோசடி செய்பவர் பணத்தை திருடியுள்ளார்.


அந்த பெண், தனது தந்தையின் நண்பரின் பெயரில் தனக்கு அழைப்பு வந்தபோது, தன்னிடம் UPI ஐடியைக் கொடுத்துள்ளார். அதில் ரூ. 25,000 அவரது போன் பே கணக்கில் இருந்து இரண்டு முறை கழிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து தனது கணக்கில் இருந்து ரூ. 1 லட்சம் வரை இழந்தார் என்பதை அறிந்தவுடன் காவல் துறையில் புகார் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, குற்றவாளியின் கணக்கை முடக்குமாறு வங்கிக்கு போலீசார் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

உங்கள் வங்கிக் கணக்கின் செய்தி அறிவிப்புகளை இயக்க வேண்டும்.
UPI இணைப்பு, QR குறியீடு அல்லது UPI ஐடியை யாருடனும் பகிர வேண்டாம்.
எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். மிக முக்கியமான OTP நம்பரை யாருடனும் பகிர வேண்டாம். ஆன்லைன் மோசடி நடந்தால், உடனடியாக சைபர் போலீசில் புகார் செய்ய வேண்டும்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..