
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இளம் நாவலாசிரியர் தனது இரண்டாவது நாவலை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடுவதென்பது மிகப்பெரிய செயல்.
நம் வாழ்க்கையில் சில கதைகளை கேட்கும்போது நமக்கும் இதுபோல் நடந்தால் நன்றாகயிருக்குமென்று நினைப்போம் அல்லது யாரோ ஒருத்தரின் கதையென்று தோன்றும். ஆனால் வெகு சில கதைகளை கேட்கும் போது தான் நமக்கு நடந்தது போலவே இருக்கிறதென்று மனது சொல்லும்.
ஸ்ரீதர் ப்ரியன் எழுதியுள்ள " பேச்சுலர் ஆஃப் கிரிக்கெட்" என்ற இந்த புதினம், எல்லா இளைஞனின் வாழ்விலும் அவனது ஒரு பருவத்தில் ஆசைபட்ட அனைத்தையும் கூறும் கதை.
ஒரு சராசரி மனிதன் கனவு காண எத்தனை துன்பங்களைத் தாண்ட வேண்டும், இறுதியில் விதி அவனை எங்கே கூட்டிப் போகுமென்று சொல்லுகிற கதை. அனுபவங்களும் தத்துவங்களும் கலந்த ஒரு படைப்பு.
மேலும் பல புதினங்கள் எழுத வாழ்த்துகள்.
Tags:
#பேச்சுலர் ஆஃப் கிரிக்கெட்
# ஸ்ரீதர் ப்ரியன்
# 2nd Novel
# Bachelor of Cricket
# Coded Triangles