வனவிலங்கு பாதுகாப்பு தூதர் ஆனார் நடிகை ஸ்ருதிஹாசன்..!

வனவிலங்கு பாதுகாப்பு தூதர் ஆனார் நடிகை ஸ்ருதிஹாசன்..!
By: TeamParivu Posted On: October 28, 2022 View: 89

வனவிலங்கு பாதுகாப்பு தூதராக நடிகை ஸ்ருதி ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 

2009-ம் ஆண்டு WWF (World wildlife fund for nature) என்ற சர்வதேச தொண்டு அமைப்பானது தொடங்கப்பட்டது. இந்த அமைப்பானது வனவிலங்குகளை இயற்கையாக பாதுகாப்பதற்கான நோக்கத்தை கொண்டுள்ளது. இந்த அமைப்பு தற்போது 29 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கொள்கை வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக கூண்டில் அடைத்தல் மற்றும் சர்க்கஸ் போன்ற செயல்களில் ஈடுபடுத்தாமல் அவற்றை சுதந்திரமாக வனங்களில் விட வேண்டும் என்பதுதான்.

இந்த அமைப்பின் இந்திய தூதராக தற்போது ஸ்ருதி ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, நிறுவனத்தின் பணிகளை ஸ்ருதி ஹாசன் இனி இந்தியாவில் மேற்கொள்வார். மேலும் இந்த நிறுவனம் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, காலநிலை மாற்றம் போன்றவற்றிற்கு ஏற்றார் போன்ற செயல்படுவதற்கு ஏற்ற வகையில் நிறுவனங்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

Tags:
#வனவிலங்கு பாதுகாப்பு தூதர்  # WWF  # ஸ்ருதிஹாசன் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..