சமையல் கேஸ், சிஎன்ஜி, குழாய் சமையல் எரிவாயுவின் விலையைக் கட்டுப்படுத்த புதிய திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஏபிஎம் கேஸ் எனப்படும் இயற்கை எரிவாயு மற்றும் அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து வரும் எரிவாயு விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்வதற்குப் பதிலாக கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு மாதமும் கட்டணங்கள் முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்திய விண்வெளிக் கொள்கை 2023க்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Tags:
#கேஸ்
# கச்சாஎண்ணெய்
# விலை
# ஒன்றியஅரசு