தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதிய முதன்மை செயலாளராக முருகானந்தம் நியமனம்..!!

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதிய முதன்மை செயலாளராக முருகானந்தம் நியமனம்..!!
By: TeamParivu Posted On: May 14, 2023 View: 70

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐஏஎஸ் அதிகாரிகளையும் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு;

* முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்

* சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம்

* நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம்

* ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம்

* போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம்

* சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்

* சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம்

* சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம்

* உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம்

* பொதுப்பணித்துறை செயலாளர் டாக்டர் மணிவாசன், சுற்றுலா இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக நியமனம்

* பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருந்த கே.நந்தகுமார் மனிதவள மேலாண்மைத்துறை செயலாளராக நியமனம்

* நந்தகுமார் வகித்துவந்த பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

* பொதுப்பணித்துறை செயலாளராக டாக்டர் சந்திரமோகன் நியமனம்.

Tags:
#ஐஏஎஸ்  # பணியிடமாற்றம்  # முதல்வர்  # மு.க.ஸ்டாலின்  # முதன்மைசெயலாளர் முருகானந்தம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..