குண்டு குண்டு உடம்பா? கவலையை விடுங்க இந்த இலை இருக்கே இத்தனை நாளும் தெரியாம போயிடுச்சே

குண்டு குண்டு உடம்பா? கவலையை விடுங்க இந்த இலை இருக்கே இத்தனை நாளும் தெரியாம போயிடுச்சே
By: TeamParivu Posted On: September 28, 2023 View: 49

கொய்யாவில் பழமும் சரி, அதன் இலையும் சரி இரண்டுமே உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.. எப்படி தெரியுமா?

கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.. இதில் கொய்யா பழத்தில் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அதை உட்கொள்வதால் அதிக கலோரிகளைப் பெறுவது தவிர்க்கப்படுகின்றது. ஒரு கொய்யாவில் 37 முதல் 55 கலோரிகள் மட்டுமே உள்ளதாம்.

கொய்யாவை உட்கொண்ட பிறகு ஒருவருக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது. இதன் காரணமாக எடை இழப்பு உணவுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.. அந்தவகையில், கொய்யாக்காயை தினமும் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.. ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாமல், ரத்தத்தின் அளவை கட்டுப்படுத்தும்... இளஞ்சிவப்பு நிற கொய்யாவை சாப்பிட வேண்டுமாம்.

நிறைய நிறைய நார்ச்சத்து கொண்டது இந்த பழம், செரிமானத்தை தாமதப்படுத்தி கெட்ட கொழுப்பையும் வெளியேற்ற உதவுகிறது. கொய்யா அமில தன்மை கொண்ட பழம் என்பதால், உடலிலுள்ள அமிலத்தன்மை, வாயுக்களை நீக்க உதவுகிறது.. அத்துடன், வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.. வெளியேற்றுவது எளிது. கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மூலத்திற்கு நல்லது. இதனால் மலச்சிக்கலும் நீங்கும். அதோடு மூலமும் சரியாகலாம்.

உடல் எடை: உடல் எடையை குறைப்பதற்கும் இந்த கொய்யா மட்டுமல்லாமல், கொய்யா இலையும் உதவுகிறது. கொய்யா இலையில் டீ போட்டுக் குடிக்கலாம்.. இதில் சிறிது இஞ்சியையும் தட்டி சேர்த்து குடித்தால், உடல் எடை குறைய உறுதுணையாக இருக்கும்.. கெட்ட கொழுப்புகள் கரைந்துவந்துவிடும். அல்லது கொய்யா இலையின் சாறு எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை மெல்ல குறையும்.. வயிறு உபாதைகள் உள்ளவர்களும் இந்த டீயை குடிக்கலாம்.. அல்லது கொய்யா இலை + புதினா இலை இரண்டையும் இரவில் நீரில் போட்டுவைத்துவிடடு, மறுநாள் காலையில் இந்த நீரை குடித்து வரலாம்.

தலைமுடி வளர்ச்சி: குளிக்க வெந்நீர் பயன்படுத்தும்போது, இந்த இலையையும் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீரில் தலையை அலசினால், பொடுகு நீங்கி, தலைமுடி வளர்ச்சியும் நன்றாக இருக்கும். கொய்யா இலைகள் முக சருமத்துக்கும் பலன்தரத்தக்கது.. இந்த இலைகளை காயவைத்து அரைத்து கொண்டு, அதனை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் முகச்சுருக்கங்கள் மறையும்... அதேபோல, கொய்யா இலைகளை ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், சருமம் பளபளப்பாகும்.. அல்லது, கொய்யா இலையை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தாலும் முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும் இருக்கும்.

கொய்யாப்பழம்: இந்த கொய்யா மற்றும் அதன் இலைகள் இரண்டுமே பற்களில் உண்டாகும் பிளேக் மற்றும் கறைகளை அகற்ற உதவும்... இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் ஈறுகளில் உண்டாகும் வீக்கம், பற்களில் ஏற்படும் தொற்றுக்களைக் குறைத்து பற்களுக்குப் போதிய பாதுகாப்பை வழங்குகிறது.. தினமும் 2 கொய்யா இலைகளை எடுத்து சுத்தம் செய்து அதை மென்று துப்பினாலே போதும். பற்கள் பளிச் பளிச்தான்..!!


Tags:
##health# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..