ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.40,000 வேண்டுமா? இத செய்தாலே போதும்

ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.40,000 வேண்டுமா? இத செய்தாலே போதும்
By: TeamParivu Posted On: November 04, 2023 View: 53

எந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பும் அந்தத் திட்டத்தை முழுதாக ஆய்வு செய்து, உங்களது இலக்குகளுக்கு அந்த திட்டம் ஏதுவாக இருக்குமா? என்பதை கண்டறிந்த பின்னரே அதில் முதலீடு செய்ய வேண்டும்.
நாம் சரியான இடத்தில் தான் முதலீடு செய்துள்ளோமா என்பது தெரியாமல் இருக்கக்கூடிய பல முதலீட்டாளர்கள் உள்ளனர். எந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பும் அந்தத் திட்டத்தை முழுதாக ஆய்வு செய்து, உங்களது இலக்குகளுக்கு அந்த திட்டம் ஏதுவாக இருக்குமா? என்பதை கண்டறிந்த பின்னரே அதில் முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு முதலீடு செய்வதற்கு முன்பு அதில் இருக்கக்கூடிய அபாயங்கள் குறித்தும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.


பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து விட்டு ஓய்வுக்கு பிறகு நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். இந்த எண்ணத்தை செயல்படுத்துவதற்கு ஒருவர் ரிட்டயர்மென்ட்டுக்கு முன்பு சரியான முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான சில உதாரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு நபர் தனக்கு 51 வயதாகும் பொழுது ஓய்வு பெற இருப்பதாக வைத்துக் கொள்வோம். இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 10 வருடங்கள் உள்ளன. அவர் செய்துள்ள முதலீடுகளுக்கான போர்ஃட்போலியோ சரிபார்ப்பு என்ன என்பதை பார்ப்போம்.


போர்ட்ஃபோலியோ செக்கப்:
இவர் கடந்த 2 முதல் 3 வருடங்களுக்கு முன்பில் இருந்தே ஈக்குவிட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய துவங்கி உள்ளார்.
இவர் தாமதமாக முதலீடு சற்று முன்பாகவே முதலீடு செய்ய துவங்கி இருப்பதால் இவரின் முதலீடு தொகை பெரிய அளவில் இல்லை.
போதுமான அளவு சேமிப்பதற்கு இவர் இன்னும் கூடுதலாக 2 முதல் 3 வருடங்கள் வேலை செய்துவிட்டு ஓய்வு பெறலாம்.
இவரது இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு வருடமும் SIPயில் கிடைக்கக்கூடிய 10% இலாபம் அவசியமாக கருதப்படுகிறது.
குறுகிய கால இலக்குகளை அடைவதற்கு மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ரெக்கரிங் டெபாசிட்களை பயன்படுத்தி சேமிக்கலாம்.
பல சிறிய மற்றும் மிதமான அளவு ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளார் என்பதால் எந்த ஒரு ஏற்ற இறக்கத்தையும் சமாளிக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..