பெங்களூரு பர்பிள் லைன் மெட்ரோ... இன்று முதல் குட்பை சொல்லும் ட்ராபிக்... அதுவும் ஒயிட்ஃபீல்டு வரை... ரெடியாருங்க!

பெங்களூரு பர்பிள் லைன் மெட்ரோ... இன்று முதல் குட்பை சொல்லும் ட்ராபிக்... அதுவும் ஒயிட்ஃபீல்டு வரை... ரெடியாருங்க!
By: No Source Posted On: November 27, 2023 View: 24

பெங்களூரு நம்ம மெட்ரோவில் முழு நீள வழித்தடமும் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கிடைக்கும் வசதிகள் என்னென்ன? பயணிகளுக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டத்தின் பின்னணி? போன்றவை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.

எப்ப சார் கடையை திறப்பீங்க என்று நடிகர் வடிவேலு கேட்பது போல் ஆகியிருந்தது பெங்களூரு நம்ம மெட்ரோவின் நிலை. அங்குள்ள பர்பிள் லைன் வழித்தடமானது கெங்கேரி முதல் பையப்பனஹள்ளி வரை செயல்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான ஐடி பூங்காக்கள் அமைந்துள்ள ஒயிட்ஃபீல்டு பகுதி வரை பர்பிள் லைன் மெட்ரோவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கி கே.ஆர்.புரம் முதல் கடுகோடி (ஒயிட்ஃபீல்டு) வரை நடந்து முடிந்தன.ஆனால் பையப்பனஹள்ளி முதல் கே.ஆர்.புரம் வரையிலான பகுதியில் மட்டும் நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால் பணிகளை முடிக்க முடியவில்லை. இதையடுத்து கே.ஆர்.புரம் டூ கடுகோடி வரை மெட்ரோ ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டன. மறுபுறம் கெங்கேரி முதல் சல்லகட்டா வரை ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது. எனவே சல்லகட்டா முதல் கடுகோடி வரை முழுமையான 43 கிலோமீட்டர் தூர பர்பிள் லைன் வழித்தடத்தை திறக்கப் போகிறார்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு நீடித்து வந்தது.

அவுட்டர் ரிங் ரோடு ட்ராபிக்ஆனால் பல்வேறு காரணங்களால் வாரங்கள் ஓடிக் கொண்டே இருந்தன. இரண்டு புதிய இணைப்புகள் மட்டும் சாத்தியப்படவில்லை. இதற்கிடையில் பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவுட்டர் ரிங் ரோடு ஸ்தம்பிக்கும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்து மெட்ரோ ரயில் பாதையின் உடனடி தேவையை உணர்த்தியது. அரசுக்கு கோரிக்கைகள் பறந்தன. பெங்களூருவாசிகள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பல லட்சம் ஐடி ஊழியர்களுக்கு பர்பிள் லைன் மெட்ரோ முழுமை பெற்றால் பெரிய நன்மைகள் கிடைக்கும் என்று வலியுறுத்தினர்.

BMRCL சூப்பர் அறிவிப்புஇதன் காரணமாகவே எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. ஒருவழியாக தேதி குறித்து பெங்களூருவாசிகள் நெஞ்சில் பாலை வார்த்தது பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL). இன்று (அக்டோபர் 9) தான் அந்த பொன்னான நாள். முறைப்படி அரசு விழாவாக நடத்தி இரண்டு புதிய இணைப்புகளையும் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இருக்கும் அவசரத்தில் அதற்கெல்லாம் நேரமில்லை. எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு இன்று முதல் மெட்ரோவில் முழு நீள வழித்தடத்தில் பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

​கிழக்கு டூ மேற்கு பெங்களூரு கனெக்‌ஷன்இதன் காரணமாகவே எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. ஒருவழியாக தேதி குறித்து பெங்களூருவாசிகள் நெஞ்சில் பாலை வார்த்தது பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL). இன்று (அக்டோபர் 9) தான் அந்த பொன்னான நாள். முறைப்படி அரசு விழாவாக நடத்தி இரண்டு புதிய இணைப்புகளையும் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இருக்கும் அவசரத்தில் அதற்கெல்லாம் நேரமில்லை. எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு இன்று முதல் மெட்ரோவில் முழு நீள வழித்தடத்தில் பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

​கிழக்கு டூ மேற்கு பெங்களூரு கனெக்‌ஷன்நம்ம மெட்ரோ வரலாற்றில் தொடக்க விழா இல்லாமல் முதல்முறை இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது. ஒருவேளை இனியும் காக்க வைத்தால் பெங்களூருவாசிகளின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என்று நினைத்துவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. இனி உற்சாகத்திற்கு பஞ்சமில்லை. இன்று முதல் பர்பிள் லைன் மெட்ரோவில் ஐடி தலைகளை ஏராளமாக பார்க்கலாம். பெங்களூரு நகரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை பர்பிள் லைன் முழுமையாக இணைப்பது பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

பெங்களூரு மெட்ரோ ரயில் டைமிங்

குறிப்பாக போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும். பயணிகள் நிம்மதி பெருமூச்சு ஒருபக்கமும், சுற்றுச்சூழல் மாசு குறைவது மறுபக்கமும் ஒரே சமயத்தில் நடக்கும். Service Frequency, அதாவது புதிய வழித்தட இணைப்பில் மெட்ரோ ரயில்கள் எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் என்ற முக்கியமான தகவலும் பகிரப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒயிட்ஃபீல்டு (கடுகோடி) முதல் பட்டந்தூர் அக்ரஹாரா வரை செல்ல 10 நிமிடங்களுக்கு ஒருமுறையும், பட்டந்தூர் அக்ரஹாரா முதல் மைசூரு ரோடு வரை 5 நிமிடங்களுக்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில்கள் வந்து கொண்டே இருக்கும்.

காலை 5 மணிக்கே ஸ்டார்ட் ஆகிடும்மெஜஸ்டிக் இண்டர்சேஞ்ச் முதல் எம்.ஜி ரோடு வரை செல்ல 3 நிமிடங்களுக்கு ஒருமுறையும் (பீக் ஹவர்களில்), மைசூரு ரோடு முதல் சல்லகட்டா வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில்கள் வந்து சேரும். ஒயிட்ஃபீல்டு ரயில் நிலையத்தில் கடைசி ரயில் இரவு 10.45 மணிக்கு புறப்படும். தினசரி காலை 5 மணி முதல் இரவு 11.05 வரை மெட்ரோ ரயில்கள் பயணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

​வாட்ஸ்-அப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..