அயலான்"திரை விமர்சனம்

அயலான்
By: TeamParivu Posted On: January 13, 2024 View: 56

கே.ஜே. ஆர்.ஸ்டுடியோஸ் சார்பாக கோடபாடி J. ராஜேஷ் தயாரிப்பில் R.ரவிகுமார் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "அயலான்"
 
இத்திரைப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர்,சரத் கேல்கர், யோகி பாபு, பால சரவணன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
வேறு ஒரு கிரகத்தில் உள்ள உலேககல் ஒன்று பூமியில் வசிக்கும் வில்லன் கைக்கு கிடைக்கிறது.
 
அவன் அந்த  உலோககல்லில் உள்ள சக்தியை தெரிந்து கொண்டு  பூமியை ஓட்டை போட்டு  நோவா கேஸை பயன்படுத்தி உலகை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரவும் சில ஆதாயங்களை தேடவும் ஆராய்சியில் இரங்குகிறான்.
 
ஆராய்ச்சியின் போது அங்கிருந்து வெளிவந்த நச்சு வாயுவால் நிறைய மக்கள் இறக்கின்றனர்.
 
இது தெரிந்தும்  செயலை செய்ய முற்படுகிறான் வில்லன்(சரத் கேல்கர்)
 
இந்த உலோககல் வந்த கிரகத்தில் வாழும் உயிரினம்(ஏலியன்) பூமியை காப்பாற்ற ஒரு ஏலியனை அனுப்புகிறது.
 
இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று அவரது அம்மா (பானுமதி) நினைக்க சிவகார்த்திகேயனும் சென்னை வருகிறார்
 
ஒரு கட்டத்தில் சென்னையில் தான் தங்கியிருக்கும் வீட்டில் ஏலியன் தஞ்சமாகிறது 
 
இந் நிலையில் வில்லன் அந்த கல்லை வைத்து சென்னையில்   ப்ராஜெக்ட் தொடங்க உள்ள நிலையில் ஏலியன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து அதை தடுத்து நிறுத்தினரா இல்லையா என்பதே படத்தின் கதை
 
வேற்று கிரகவாசி உயிரினத்தை சயின்ஸ்  படமாகக் உருவாக்கி நம்மை ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் ரவிக்குமார்
 
நாயகன் சிவகார்த்திகேயன். தனக்கென ஒரு ஹைலைட் பாடல் காட்சி,மற்றும் ஹீரோயினுடன் காதல் காட்சி,காமெடி நடிகர்களுடன் கலகலப்பான காட்சி, ஏலியனுடன் உணர்வுப்பூர்வமான காட்சி என ஒரு நாயகனுக்கு உண்டான அத்தனை காட்சிகளும் இப்படத்தில் அவருக்கு ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் தன்னை சிறப்பாக நிலை நிறுத்திக் கொண்டார் 
 
வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார் ரகுல் பிரீத் சிங்.
 
காமெடிக்கென பஞ்சமே இல்லாமால்   கருணாகரன்,யோகி பாபு, கோதண்டம், பால சரவணன் ஆகியோர் படம் முழுவதும் வலம் வந்துள்ளனர்
 
அயலானாக வரும் ஏலியன் சிறப்பாக நடித்து குழந்தைகளுக்கு ஹீரோவாகவே மாறி இருக்கிறார்.
 
இவருக்கு  குரல் கொடுத்திருக்கும் நடிகர் சித்தார்த் அந்த ஏலியனுக்கு தன் குரல் மூலம் உயிரூட்டி ள்ளார்
 
வில்லனாக வலம் வரும் சரத் கேல்கர் வழக்கமான வில்லத்தனம் காட்டி இறுதியில் நாயகனிடம் தோற்றுள்ளார்.
 
இவருடன் பயணித்து வரும் இஷா கோபிகர் வெறும் ஆக்சன் காட்சிகளில் மட்டும் தோன்றி அதிரடி காட்டியுள்ளார்
 
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மிக  சிறப்பாக கையாண்டு  ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு உருவாக்கியுள்ளனர்
 
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது பிரம்மாண்டமான ஹாலிவுட் தர பின்னணி இசையை கொடுத்து மூலம் படத்திற்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளார்
 
நிரவ்ஷா ஒளிப்பதிவில் கிராபிக்ஸ் காட்சிகள் வி எப் எக்ஸ் காட்சிகள் ஏலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராமத்து  காட்சிகள் என அனைத்தும்  சிறப்பாக உள்ளது
 
 மொத்தத்தில் ரசிகர்களுக்கு  இப்படம் அயலான் பொங்கல்

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..