தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 11 முதல் 25 வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 11 முதல் 25 வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை..!!
By: TeamParivu Posted On: September 10, 2022 View: 124

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 11 முதல் 25-ம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும் என தமிழக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. 

அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீவுத்திடலில்  55 விற்பனை கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விபத்துகளை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட வலியுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பட்டாசு விற்பனையில் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் பட்டாசு உற்பத்தியாளர் சங்கமும் கடைகள் அமைக்கலாம் என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

Tags:
#தீபாவளி பண்டிகை  # சென்னை தீவுத்திடல்  # பட்டாசு  # சுற்றுலாத்துறை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..