என் ஆண்டவருடன்.. 'கமல் 233' படத்துக்கு ஸ்பெஷலாக வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்.!

என் ஆண்டவருடன்.. 'கமல் 233' படத்துக்கு ஸ்பெஷலாக வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்.!
By: TeamParivu Posted On: November 05, 2023 View: 36

'இந்தியன் 2' படத்தில் நடித்து முடித்துள்ள கமல் அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 'KH 233' படமாக உருவாக இருக்கும் இப்படம் மீது ரசிகர்கள் இடையில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் 'கமல் 233' படத்திற்காக எச். வினோத்துக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் நடிப்பில் தற்போது 'இந்தியன் 2' உருவாகியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் இடையில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்பட்டும் ஷங்கரின் இயக்கத்தில் தயாராகியுள்ளது இப்படம். மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ஷங்கர் படத்தை முடித்ததை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் கமல். தமிழ் சினிமாவில் 'சதுரங்க வேட்டை' படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அனைவரையும் கவனிக்க வைத்தார் எச். வினோத். இப்படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் படத்தை இயக்கி பிரேமுக்கு பிரேம் மிரட்டி இருந்தார்.
முதல் இரண்டு படங்கள் தரமாக கொடுத்து விட்டு அஜித்துடன் இணைந்தவர், தொடர்ச்சியாக மூன்று படங்களில் பணியாற்றினார். நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களில் எச். வினோத், போனி கபூர், அஜித் கூட்டணி இணைந்து பணியாற்றினார்கள். இப்படங்களை தொடர்ந்து தற்போது முதன்முறையாக கமலுடன் இணைந்துள்ளார் வினோத்.

'KH 233' படமாக உருவாகவுள்ள இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்காக எச். வினோத்துக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், என் ஆண்டவருடன் எச். வினோத் அண்ணன் இணைந்துள்ள அற்புதமான முயற்சிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு சோஷியல் மீடியாவில் கவனம் இணைந்து வருகிறது.
கமலின் வெறித்தனமான ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவரை வைத்தே 'விக்ரம்' படத்தை இயக்கி கோலிவுட் சினிமாவே வியக்கும் வெற்றியை பெற்றார். தரமான பேன் பாய் ஆக்ஷன் சம்பவமாக இப்படம் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பியது. இப்படத்தினை தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்கி மீண்டும் ஒரு வெற்றி கொடுத்துள்ளார். மேலும் கமலை வைத்து 'விக்ரம் 2' படத்தையும் இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..