மார்க்கெட்டும் போச்சு தேதியும் போச்சு! ‘லால்சலாம்’ படத்தால் நொந்து போன விஷ்ணு விஷால்!

 மார்க்கெட்டும் போச்சு தேதியும் போச்சு! ‘லால்சலாம்’ படத்தால் நொந்து போன விஷ்ணு விஷால்!
By: TeamParivu Posted On: February 21, 2024 View: 23

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஸ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் என பலருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லால்சலாம்’. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது.
படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வெற்றியை பெற்று விமர்சனத்தையும் பெற்று வருகிறது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 12 கோடிகள் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்து இருக்கிறது.

இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் தோல்வியடைந்துள்ள நிலையில் விஷ்ணு விஷால் மிகவும் சோகத்தில் இருக்கிறாராம் . ஏனென்றால் லால் சலாம் திரைப்படத்தின் மூலம் தனது மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் படத்தின் படப்பிடிப்பிற்காக நாள் ஒதுக்கியது எல்லாம் வேஸ்ட் ஆகிவிட்டதாகவும் புலம்பி கொண்டிருக்கிறாராம். படத்திற்காக அவர் பல நாட்கள் கால்ஷீட் கொடுத்ததால் வேதனையில் இருக்கிறாராம் . இந்த தகவலை யூடியூப் சேனல் ஆன வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
இதனைப்போலவே கடந்த சில நாட்களுக்கு முன்பு லால் சலாம் திரைப்படம் கொடுத்த குஷியில் நடிகர் விஷ்ணு விஷால் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி, அவர்  இனிமேல் அவர் தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 7 கோடி வரை வாங்கவுள்ளதாகவும், தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..