பாகிஸ்தானில் இறுதியானது கூட்டணி ஆட்சி.. புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்!

பாகிஸ்தானில் இறுதியானது கூட்டணி ஆட்சி.. புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்!
By: TeamParivu Posted On: February 22, 2024 View: 50

நீண்ட இழுபறி, குழப்பங்களுக்கு பிறகு பாகிஸ்தானில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML – N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதால் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பும், அதிபராக ஆசிப் அலி சர்தாரியும் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
பெரும் பதற்றம், அடுத்தடுத்த குண்டு வெடிப்பு மற்றும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 8ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கையில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதன்படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 92 இடங்கள் வெற்றி பெற்றனர். இருப்பினும், அவரால் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவியது. இதுபோன்று, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்கள், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றது.

இதனால் பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது, யார் யாருடன் கூட்டணி மற்றும் பிரதமர் வேட்பாளர் யார் என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், குழப்பங்கள் நீடித்தது. இந்த சூழலில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி மற்றும்  பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருவதாகவும், பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால், இது இறுதிப்படுத்தவில்லை தொடர் இழுபறியில் இருந்து வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML – N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு கட்சி தலைவர்களும் கூட்டணி ஆட்சியமைக்க ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த கூட்டணிக்கு முட்டாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் (MQM-P) அதன் 17 இடங்களுடன் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது.
எனவே, பல நாட்கள் தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாடு எட்டியுள்ளது. பிபிபி தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, PML-N தலைவர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாகவும், அதே நேரத்தில் PPP இணைத் தலைவர் ஆசிப் ஜர்தாரி அதிபராக பதவியேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..