IND vs AUS: 'நான் ரோஹித்துக்கு மாற்றா?'.. ஓபனாக பேசிய ஜெய்ஷ்வால்: இனி இப்டிதான் விளையாடுவாராம்!

IND vs AUS: 'நான் ரோஹித்துக்கு மாற்றா?'.. ஓபனாக பேசிய ஜெய்ஷ்வால்: இனி இப்டிதான் விளையாடுவாராம்!
By: TeamParivu Posted On: November 27, 2023 View: 40

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு அபார வெற்றியைப் பெற்றது.


இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. பனியின் தாக்கம் இருந்ததால், ஆஸ்திரேலிய அணியால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை. இந்திய அணி தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட ஆரம்பித்தது.

இந்திய இன்னிங்ஸ்:

இந்திய இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இந்திய அணியில், முதல் மூன்று பேட்டர்களும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தனர். ஜெய்ஷ்வால் 25 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 53 ரன்களை குவித்து மிரட்டினார். இதனைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இருவரும் துவக்கத்தில் நிதானமாக விளையாடிய நிலையில், அடுத்து அதிரடியாக ஆரம்பித்தார்கள். இந்நிலையில், வழக்கம்போல இஷான் கிஷ் ஒயிடிற்கு அருகில் சென்ற பந்தை துரத்தி அடிக்க முற்பட்டு, ஆட்டமிழந்தார். கிஷன் 52 (32) ரன்களை அடித்திருந்தார். அடுத்து, ருதுராஜ் கெய்்வாட் 58 (43), சூர்யகுமார் யாதவ் 19 (10) இருவரும் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார்கள்.

இறுதிக் கட்டத்தில் ரிங்கு சிங் 9 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 31 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 235/4 ரன்களை குவித்து அசத்தியது.

ஆஸி இன்னிங்ஸ்:

ஆஸி இன்னிங்ஸ்:
மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், ஓபனர்கள் ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ ஷார்ட் இருவரும் தலா 19 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து இங்கிலிஸ் 2 (4), மேக்ஸ்வெல் 12 (8) ஆகியோரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் டிம் டேவிட் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க ஆரம்பித்தார்கள். இருவரும் தொடர்ந்து பவுண்டரி, சிக்ஸர்களை அடித்ததால், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில், ரவி பிஷ்னோய் பந்தை தூக்கியடிக்க முற்பட்டு டிம் டேவிட் 37 (22) ஆட்டமிழந்தார். அவ்வளவுதான், விக்கெட்கள் அடுத்தடுத்து விழ ஆரம்பித்தது. ஸ்டாய்னிஸ் 45 (25), சீன் அபோட் 1 (2) என விக்கெட்கள் விழ ஆரம்பித்ததால், வெற்றி வாய்ப்பு இந்தியா பக்கம் திருப்பியது. இறுதியில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 193/9 ரன்களை மட்டும் சேர்த்து, 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மேத்யூ வேட் 38 (22) கடைசிவரை களத்தில் இருந்தார்.

​யாஷஸ்வி ஜெய்ஷ்வால் பேட்டி:

​யாஷஸ்வி ஜெய்ஷ்வால் பேட்டி:
இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதினை வென்ற யாஷஸ்வி ஜெய்ஷ்வால், அதன்பிறகு பேட்டிகொடுத்தார். அதில், ''அனைத்து ஷாட்களையும் ஆட முற்பட்டேன். பயமில்லாமல் விளையாடுவது மிகமுக்கியம். எனது முடிவில் நான் உறுதியாக இருந்தேன். நான் சுந்திரமாக விளையாட விரும்புகிறேன் என கேப்டன், பயிற்சியாளரிடம் கூறினேன். என்னைப் பொறுத்தவரை, தற்போது என்னை வளர்த்துக்கொள்ளத்தான் விரும்புகிறேன். யாருடனும் போட்டிபோடும் எண்ணம் இல்லை. அதைப்பற்றி யோசிக்க விரும்பவில்லை. எனது ஷாட்களை மேம்படுத்த கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்'' எனக் கூறினார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..