ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்: அமெரிக்காவின் 'மறைமுகப் போர்களை' நடத்தியதாக விமர்சிக்கப்படுபவர்

ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்: அமெரிக்காவின் 'மறைமுகப் போர்களை' நடத்தியதாக விமர்சிக்கப்படுபவர்
By: TeamParivu Posted On: December 01, 2023 View: 26


உலக அரசியல் விவகாரங்களில் கோலோச்சிய ஹென்றி கிஸ்ஸிங்கர் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 100.
 வெளிநாட்டு உறவுகளில் "ரியலிசத்தை" உறுதியுடன் கடைப்பிடிப்பவராக விளங்கிய, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற நிலையில், மறுபுறம் அவர் ஒரு போர்க் குற்றவாளி என்று கடுமையான கண்டனங்களையும் எதிர்கொண்டார்.
 
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் என்ற முறையில், சோவியத் யூனியன் மற்றும் சீனாவுடனான உறவுகளை சிதைத்த டிடென்டே கொள்கையை அவர் உறுதியுடன் பின்பற்றினார்.அவரது யாருக்கும் புரியாத ராஜதந்திரம் 1973 ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேலிய போரை முடிவுக்குக் கொண்டு வர உதவியது. மேலும், பாரிஸ் சமாதான உடன்படிக்கையின் பேச்சுவார்த்தை அமெரிக்காவை வியட்நாமில் இருந்து வெளியேற்றியது.ஆனால் அவரது ஆதரவாளர்கள் "ரியல்போலிடிக்" என்று வர்ணித்ததை அவரது விமர்சகர்கள் ஒழுக்கக்கேடானவை என்று கண்டனம் செய்தனர்.
 
சிலியில் ஒரு இடதுசாரி அரசாங்கத்தை கவிழ்த்த ரத்தக்களரி ஆட்சிக்கவிழ்ப்புக்கு மறைமுகமான ஆதரவு மற்றும் அர்ஜென்டினா இராணுவம் அதன் மக்களுக்கு எதிராக நடத்திய போரை கண்மூடித்தனமாக ஆதரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன.கிஸ்ஸிங்கருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதைக் கேள்விப்பட்ட நகைச்சுவை நடிகர் டாம் லெஹ்ரர், "அரசியல் நையாண்டிகள் வழக்கற்றுப் போய்விட்டன" என்று பிரபலமாக அறிவித்தார்.
 
ஹென்ஸி கிஸ்ஸிங்கர் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்; ஆனால் அவரது விமர்சகர்கள் அவரை பல விதங்களில் கண்டித்தனர்.ஹீன்ஸ் ஆல்ஃப்ரெட் கிஸ்ஸிங்கர் 27 மே 1923 இல் பவேரியாவில் நடுத்தர வர்க்க யூத குடும்பத்தில் பிறந்தார்.நாஜி துன்புறுத்தலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் அவரது குடும்பம் தாமதமாக வெளியேறியது. ஆனால் அக்குடும்பத்தினர் 1938 இல் நியூயார்க்கில் உள்ள ஜெர்மன்-யூத சமூகத்துடன் கலந்து வாழத்தொடங்கினர்.ஹென்றி கிஸ்ஸிங்கர் தமது 11 வது வயதில் தம்பியுடன் இருந்த போது எடுத்தபடம்.
 
"ஹென்றி" இயற்கையாகவே கூச்ச சுபாவமுள்ள இளைஞராக இருந்தார். அவர் கால்பந்தின் மீதான தனது காதலை ஒருபோதும் இழக்கவில்லை.பகலில் ஷேவிங் பிரஷ் தொழிற்சாலையில் பணிபுரியும் போது, ​​இரவில் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். பள்ளியில் கணக்கியல் படிக்க திட்டமிட்டார் ஆனால் ராணுவத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.
 
காலாட்படைக்கு அவர் நியமிக்கப்பட்ட நிலையில், அவரது மூளை மற்றும் மொழித் திறன்கள் ராணுவ உளவுத்துறையால் பயன்படுத்தப்பட்டன. கிஸ்ஸிங்கர் புல்ஜ் போரின் போது நடவடிக்கை ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டார். மேலும் அவர் ஒரு சாதாரணப் பணியில் இருந்தாலும், கைப்பற்றப்பட்ட ஒரு ஜெர்மன் நகரத்தை நிர்வகித்து வந்தார்.
 
போரின் முடிவில், அவர் எதிர் உளவுத்துறையில் பணியில் சேர்ந்தார். 23 வயதான அவருக்கு முன்னாள் கெஸ்டபோ அதிகாரிகளை வேட்டையாட ஒரு குழு வழங்கப்பட்டது. சந்தேக நபர்களை கைது செய்து தடுத்து வைக்க முழு அதிகாரமும் அளிக்கப்பட்டிருந்தது.
சிறிய அணுசக்தியுடன் கூடிய போர்கள் பின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பிய அவர், ஹார்வர்டில் அரசியல் அறிவியலைப் படித்தார். அதைத் தொடர்ந்து கல்வியில் தனது தகுதியை உயர்த்திக்கொண்டார்.
 
1957 ஆம் ஆண்டில், அவர் அணுசக்தி போர் மற்றும் வெளியுறவுக் கொள்கை எனப்பொருள்படும் ‘நியூக்கிளியர் வார் அண்டு ஃபாரின் பாலிசி’ (Nuclear War and Foreign Policy) என்ற புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகத்தில், ஒரு வரையறுக்கப்பட்ட அணு ஆயுதப் போரை எளிதில் வெல்லமுடியும் என்று கூறினார். ஒரு புதிய வகை சிறிய ஏவுகணையின் "தந்திரோபாய" மற்றும் "மூலோபாய" பயன்பாடு பகுத்தறிவு மிக்கதாக இருக்கலாம் என்று சந்தேகத்திற்கு எதிரான மொழியில் அவரது புத்தகம் இருந்தது.
 
இப் புத்தகம் அவரைக் கவனிக்க வைத்தது. கிஸ்ஸிங்கரின் புகழ் மற்றும் செல்வாக்கிற்கான நீண்ட பாதை தொடங்கியது என்பதுடன், "சிறிய அணுசக்தி போர்" கோட்பாடு அப்போதும் செல்வாக்கு செலுத்தியது.அவர் நியூயார்க் கவர்னர் மற்றும் அதிபர் பதவிக்கு வருவார் என நம்பப்பட்ட நெல்சன் ராக்பெல்லரின் உதவியாளரானார். 1968 இல் ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க அதிபரான ​​கிஸ்ஸிங்கருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற முக்கிய பதவி வழங்கப்பட்டது.
 
அது ஒரு சிக்கலான பணியாக இருந்தது. கிஸ்ஸிங்கரின் சர்வதேச உறவுகளின் ஆலோசனையை அதிபர் நம்பியிருப்பதாக உணர்ந்தார். ஆனால் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க யூதர்களின் மீது சந்தேகம் கொண்டிருந்தார்.
 
பனிப்போர் உச்சத்தில் இருந்த காலம் அது: கியூபா மீது மட்டும் தாக்குதல் தவிர்க்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தினர் அப்போதும் வியட்நாமில் இருந்தன என்பதுடன் ரஷ்யா அப்போது தான் ப்ரேக் மீது படையெடுத்தது.ஆனால் நிக்சனும், கிஸ்ஸிங்கரும் சோவியத் யூனியனுடனான பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்தந்த அணு ஆயுதங்களின் அளவைக் குறைப்பதற்கான பேச்சுக்களை புதுப்பிக்கும் நடவடிக்கை தான் அது.
 
அதே நேரத்தில், சீன அரசாங்கத்துடன், பிரதமர் சூ என்லாய் மூலம் ஒரு உரையாடல் தொடங்கப்பட்டது. இது சீன-அமெரிக்க உறவுகளை மேம்படுத்தியது என்பதுடன் சோவியத் தலைமையின் மீது இராஜதந்திர அழுத்தத்தை ஏற்படுத்தியது - உண்மையில் அவர்கள் மிகப்பெரிய அண்டை நாடுகளுக்கு பயந்து கொண்டிருந்தனர்.
 
கிஸ்ஸிங்கரின் முயற்சிகள் 1972 இல் நிக்சனின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீனப் பயணத்திற்கு நேரடியாக வழிவகுத்தது, அவர் சூ என் லாய், மாவோ சேதுங் ஆகிய இருவரையும் சந்தித்தார், மேலும் 23 ஆண்டுகாலம் ராஜதந்திர ரீதியாக தனிமைப்பட்டிருந்தது மற்றும் விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
 
பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பில் நடந்த அரசு விருந்தில் ஹென்றி கிஸ்ஸிங்கர், சீனப் பிரதமர் சூ என்லாயுடன் பேச்சு நடத்தினார்.இதற்கிடையில், வியட்நாமில் இருந்து அமெரிக்கா தன்னை பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
 "கௌரவத்துடன் அமைதி" என்பது நிக்சன் தேர்தல் உறுதிமொழியாக இருந்தது. மேலும், கிஸ்ஸிங்கர் நீண்ட காலமாக அமெரிக்க ராணுவ வெற்றிகள் அர்த்தமற்றவை என்று முடிவு செய்திருந்தார். ஏனெனில் அவற்றின் மூலம் "எங்கள் இறுதிப் பின்வாங்கலைத் தக்கவைக்கக்கூடிய ஒரு அரசியல் யதார்த்தத்தை அடைய முடியாது," என்பது அவருடைய எண்ணமாக இருந்தது.
 
அவர் வடக்கு வியட்நாமுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். ஆனால், கம்யூனிஸ்டுகளிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் வீரர்களைப் பறிக்கும் முயற்சியாக நடுநிலையான கம்போடியாவில் ரகசிய குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்த நிக்சனுடன் ஒப்புக்கொண்டார்.அவரது இந்தக் கொள்கை, குறைந்தது 50,000 குடிமக்களின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது, மேலும் கம்போடியாவின் ஸ்திரமின்மையைக் குலைத்து உள்நாட்டுப் போர் மற்றும் போல்பாட்டின் மிருகத்தனமான ஆட்சிக்கு வழிவகுத்தது.
 
ஹென்றி கிஸ்ஸிங்கர் 1973 இல் பாரிஸில் வடக்கு வியட்நாமின் லு டக் தோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இவர்களுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.பாரிஸில் வியட் காங் உடனான கடுமையான பேச்சுவார்த்தைகளின் போது, ​​கிஸ்ஸிங்கர் - அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார் - தெற்கு வியட்நாமில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இது வடக்கு வியட்நாமின் லு டக் தோவுடன் அமைதி பிரச்சாரகர்களால் கசப்பான தாக்குதலுக்கு உள்ளான முடிவை எட்டியதால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.கிஸ்ஸிங்கர் இந்த விருதை "அடக்கத்துடனும், அமைதியுடனும்" ஏற்றுக்கொண்டார். மேலும் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு பரிசுத் தொகைகளை வழங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கம்யூனிஸ்ட் படைகள் தெற்கு வியட்நாமைக் கைப்பற்றியபோது, ​​​​அவர் அதைத் திரும்பப் பெற முயன்றார்.
 
அவரது யாருக்கும் புரியாத ராஜதந்திரம் 1973 ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரைத் தொடர்ந்து போர் நிறுத்தத்துக்கு வழிகோலியது.நிக்சனும் கிஸ்ஸிங்கரும் இஸ்ரேலை ரகசிய வெள்ளை மாளிகை ‘டேப்பிங் சிஸ்டம்‘ மூலம் கையாண்ட விதத்துக்கு இஸ்ரேல் பிரதமர் கோல்டா மெய்ர் உற்சாகமான நன்றியை வெளிப்படுத்தினார்.
 
ஆனால் மெய்ர் வெளியேறிய பிறகு, ‘ரகசிய டேப்பிங் சிஸ்டம்‘ ஒரு இருண்ட உண்மையான அரசியலை வெளிப்படுத்தியது. ரஷ்ய யூதர்கள் இஸ்ரேலில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு சோவியத் யூனியனுக்கு அழுத்தம் கொடுக்க கிஸ்ஸிங்கர் அல்லது நிக்சன் ஆகிய இருவரும் எந்த எண்ணமும் கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்தது.
 
"சோவியத் யூனியனில் இருந்து யூதர்கள் குடியேறுவது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் நோக்கம் அல்ல" என்று கிஸ்ஸிங்கர் கூறினார். "சோவியத் யூனியனில் அவர்கள் யூதர்களை எரிவாயு அறைகளில் வைத்தால், அது அமெரிக்க கவலை அல்ல. ஒருவேளை மனிதாபிமான அக்கறை," என்றார் அவர்.
 
ஹென்றி கிஸ்ஸிங்கர் 1976 இல் ஜெனரல் அகஸ்டோ பினோசெட்டை வாழ்த்தியபோது எடுத்த படம்.இருப்பினும் சிலியின் அதிபராக மார்க்சிஸ்ட் சால்வடார் அலெண்டே தேர்ந்தெடுக்கப்பட்டது அமெரிக்காவை சிக்கலில் ஆழ்த்தியது. புதிய அரசாங்கம் கியூபாவுக்கு ஆதரவளிக்கும் நிலையிலும், தேசியமயமாக்கப்பட்ட அமெரிக்க நிறுவனங்களாகவும் இருந்தது.
 
சிஐஏ சிலியில் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக புதிய அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகளுக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டது. கிஸ்ஸிங்கர் இந்த நடவடிக்கையை அங்கீகரித்த குழுவிற்கு தலைமை தாங்கினார்.
 "ஒரு நாடு அதன் மக்களின் பொறுப்பற்ற தன்மையால் கம்யூனிசமாக மாறுவதை நாம் ஏன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார். "சிலி வாக்காளர்கள் தங்களைத் தாங்களே முடிவு செய்ய விடப்பட வேண்டிய பிரச்சினைகள் மிகவும் முக்கியமானவை," என்றும் அவர் பேசினார்.
 
இறுதியில், ராணுவம் நுழைந்தது மட்டுமல்லாமல், ஜெனரல் பினோசெட் அதிகாரத்தைக் கைப்பற்றிய வன்முறைப் புரட்சியில் அலெண்டே உயிரிழந்தார். அவரது வீரர்கள் பலர் சிஐஏ மூலம் ஊதியம் பெற்றவர்களாக இருந்தனர்.பிந்தைய ஆண்டுகளில், மனித உரிமை மீறல் மற்றும் ராணுவ ஆட்சியின் கீழ் வெளிநாட்டு பிரஜைகளின் மரணங்கள் குறித்து விசாரிக்கும் பல நீதிமன்றங்களால் கிஸ்ஸிங்கருக்கு எதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
ஜெரால்ட் ஃபோர்டு வாட்டர்கேட் ஊழலுக்குப் பிறகு கிஸ்ஸிங்கரை வெளியுறவுத்துறை அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தார்.ஒரு வருடம் கழித்து, கிஸ்ஸிங்கர் வாட்டர்கேட் ஊழல் காரணமாக ரிச்சர்ட் நிக்சன் வெள்ளை மாளிகையை கண்ணீருடன் விட்டு வெளியேறுவதைப் பார்த்தார். அவருக்கு அடுத்து அதிபர் பதவியேற்ற ஜெரால்ட் ஃபோர்டு, அவரை வெளியுறவுத் துறை அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தார்.
 
அவர் ரொடீசியாவின் வெள்ளையின சிறுபான்மை அரசாங்கத்திற்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்க அழுத்தம் கொடுத்தார். ஆனால் அர்ஜென்டினா ராணுவ ஆட்சிக்கு எதிரான விமர்சகர்கள் "காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதைப்" புறக்கணித்ததாக குற்றச் சாட்டு எழுந்தது.1977 இல் அவர் பதவியை விட்டு வெளியேறிய பிறகும் சர்ச்சை அவரைப் பின்தொடர்ந்தது. மாணவர்களின் எதிர்ப்பிற்குப் பிறகு, அவருக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு பணிச் சலுகை திரும்பப் பெறப்பட்டது.
 
 
அவர் ஜிம்மி கார்ட்டர் மற்றும் பில் கிளிண்டனின் வெளியுறவுக் கொள்கையின் சக்திவாய்ந்த விமர்சகராக ஆனார். அமெரிக்க அதிபர்கள் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் மிக வேகமாகச் செயல்படவேண்டும் என்று அவர் வாதிட்டார். கிஸ்ஸிங்கரைப் பொறுத்தவரை, அது அங்குலம் அங்குலமாக மெதுவாக நடந்ததாக கருதப்பட்டது.
 
9/11 தாக்குதலுக்குப் பிறகு, நியூயார்க் மற்றும் வாஷிங்டன் மீதான தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்கு தலைமை தாங்குமாறு ஜார்ஜ் டபிள்யூ புஷ் அவரைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் சில வாரங்களுக்குள் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் தனது ஆலோசகர்களாக யாரைப் பயன்படுத்தினார் என்பது பற்றிய கேள்விகளுக்கும், அவரது விசாரணையின் போக்கு குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை என்பதால் அவர் அந்தப் பொறுப்பில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
 
அவர் அதிபர் புஷ் மற்றும் துணை அதிபர் டிக் செனி ஆகியோருடன் அவர் பல சந்திப்புகளை நடத்தினார். 2003 படையெடுப்பைத் தொடர்ந்து இராக்கில் அரசியல் ரீதியிலான கொள்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினார். "கிளர்ச்சிக்கு எதிரான வெற்றி, வெறியேறுவதற்கான ஒரே உத்தி" என்ற ஆலோசனையை அவர்களுக்கு அளித்தார்.
 
எப்போதும் செல்வாக்கு பெற்ற அவர், 2017 இல் அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வெளியுறவு விவகாரங்கள் குறித்து அவருக்கு விரிவாக விளக்கினார். விளாடிமிர் புதினின் கிரைமியா ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவும் அப்போது அவர் பரிந்துரைத்தார்.
 
இருப்பினும், 2023 இல் அவர் 100 வயதை எட்டிய நேரத்தில், அவர் யுக்ரேன் மீதான தனது பார்வையை மாற்றினார். ரஷ்யப் படையெடுப்பிற்குப் பிறகு, அதிபர் ஜெலென்ஸ்கியின் நாடு, பின்னாளில் அமைதி ஏற்பட்ட பிறகு நேட்டோ கூட்டமைப்பில் சேர வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
 
30 ஆண்டுகளுக்கு பிறகு நகரத் துவங்கியிருக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை
27 நவம்பர் 2023
இஸ்ரேலை உருவாக்கி 13 ஆண்டுகள் ஆண்ட டேவிட் பென் குரியன் யார்?
29 நவம்பர் 2023
ஹென்றி கிஸ்ஸிங்கர்பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
ஹென்றி கிஸ்ஸிங்கர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பிடம் வெளியுறவு விவகாரங்கள் தொடர்பான விளக்கங்களை அளித்தார்.
 
ஹென்றி கிஸ்ஸிங்கர் ஏராளமான நட்புவட்டாரத்தையும், எதற்கும் தயாராக இருந்த புத்திசாலித்தனத்தையும் எப்போதும் கைவசம் வைத்திருந்தார். "அதிகாரம்", என்பது "கடைசியல் ஒரு போதையைத் தரும்" என சொல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
 
கடந்த நூற்றாண்டின் உலகளாவிய முக்கிய தருணங்களில் அவர் மனித வாழ்க்கையைவிடப் பெரிய பங்களிப்பை நல்கியவராக அவர் கருதப்படுகிறார்.
 
பலரின் கோபத்திற்கு, அவர் ஏற்றுக்கொண்ட நாடான அமெரிக்காவின் நலன்கள் தான் முக்கியம் என்பதில் இருந்து அவர், பலதரப்பினரின் கோபங்களைக் கடந்தும், எப்போதும் பின்வாங்கவில்லை.
 
"தன் வெளியுறவுக் கொள்கையில் தார்மீக முழுமையைக் கோரும் ஒரு நாடு", எப்போதும் "முழுமையையும், நிலையான பாதுகாப்பையும் பெறமுடியாது" என்று அவர் ஒருமுறை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..