3 மாதம் வரை வைத்து பயன்படுத்தக்கூடிய ஆவின் டிலைட் பால் அறிமுகம்..!!

3 மாதம் வரை வைத்து பயன்படுத்தக்கூடிய ஆவின் டிலைட் பால் அறிமுகம்..!!
By: TeamParivu Posted On: November 03, 2022 View: 99

வீடுகளில் வைத்து 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் ‘ஆவின் டிலைட்’ பசும் பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

வீடுகளில் பலர் டீ அல்லது காபி போடுவதற்காக பால் சுட வைக்கும்போது, அது கெட்டுவிட்டது, திரிந்துவிட்டது என்று பெண்கள் கூறவதை கேட்டு இருக்கலாம். அதேபோல, அதை அதற்கான சரியான குளிர்நிலை அல்லது வெப்ப நிலையில் வைத்திருக்கவில்லை என்றால் பால் கெட்டுவிடும்.

இந்நிலையில் 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்த கூடிய ‘டிலைட்’ என்ற புதிய பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த டிலைட் பால் குளிர்சாதன வசதி ஏதுமில்லாமல் 90 நாட்கள் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். ஆவின் டிலைட் பாலில் 3.5 சதவிகித கொழுப்பு, பூஜ்ஜிய சதவீதம் பாக்டீரியா உள்ளது. வாங்கிய உடன் பாலை சூடாக்கி பயன்படுத்தலாம். நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கும் ஏற்றது. 500 மி.லி. ஆவின் டிலைட் பசும் பால் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மி.லி. பாக்கெட்டுகளில் தயார் செய்யப்பட்டுள்ளது. எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில் நுட்ப முறையில் இந்த ஆவின் டிலைட் என்ற பசும் பால் தயாரிக்கப்படுகிறது. என ஆவின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:
#ஆவின் டிலைட்  # பால்  # ஆவின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..