கல்விச் செல்வத்தை வழங்குவது மாநில அரசின் கடமை; கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற பிரதமர் முன்னிலையில் முதல்வர் வலியுறுத்தல்..!!

கல்விச் செல்வத்தை வழங்குவது மாநில அரசின் கடமை; கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற பிரதமர் முன்னிலையில் முதல்வர் வலியுறுத்தல்..!!
By: TeamParivu Posted On: November 11, 2022 View: 69

எந்த சூழ்நிலையிலும் யாராலும் பறிக்க முடியாத ஒரே சொத்து கல்வி. கல்விச் செல்வத்தை வழங்குவது ஒரு மாநில அரசின் கடமை. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்தபோது, கல்வி முதலில் மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டது. அவசர காலத்தின் போது மட்டுமே அது பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே பிரதமர், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

குஜராத்தில் பிறந்து ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வளம் வந்த அண்ணல் காந்தி அடிகளுக்கு தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக அதிகம் தனது வாழ் நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்த காந்தியடிகள் தமிழ் மொழியை விரும்பி கற்றுக்கொண்டார். மொ.க.காந்தி என தமிழை கையளித்திட்டார். திருக்குறளை படிப்பதற்காகவே தமிழ் கற்க வேண்டும் என சொன்னவர் காந்தி.

இவை அனைத்துக்கும் மேலாக உயர் ஆடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்கு நுழைந்தவரை, அரையாடை கட்டவைத்த இந்த தமிழ் மண் வடஇந்தியர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என சொன்னவர் காந்தியடிகள். அத்தகைய காந்தியடிகள் பெயரால் அமைந்த பல்கலைக்கழகத்தில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருகை தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் என்ற வகையில் வருக வருக வருக என வரவேற்கிறேன்.

கல்வியின் வழியாக மனிதரை சமூகத்துக்கு பயனுள்ளவராக மாற்றும் வகையில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் உயர நாடு உயரும் என்ற காந்தியின் கொள்கை அடிப்படையில், தேச தந்தை காந்தியடிகள் நல்லாசியுடன் அவரது சீடர்களான டாக்டர் ஜி.ராமசந்திரன், அவரது துணைவியார் டாக்டர் எஸ்.சௌந்திரம் அவர்களால் தொடங்கப்பட்ட கிராமிய பேச்சு நிறுவனம் இன்று நிகர்நிலை பல்கலை.யாக வளர்ந்து சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும், வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் இங்கு மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை பயின்று வருகின்றனர் எனபதை அறியும் பொது பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு ஏதுவாக கல்வி கொடையாக 207 ஏக்கர் நிலத்தினை இந்த பல்கலை.க்காக வழங்கிய சின்னாளப்பட்டியை சேர்ந்த புரவளர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறேன்.

தமிழ்நாட்டில் இன்று மணிலா அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலை.கள் இயங்கி வருகிறது. இவை கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல், விளையாட்டு, கால்நடை மருத்துவம், மருத்துவம், மீன்வளம், சட்டம், வேளாண்மை, மற்றும் இசை ஆகிய துறைகள் திறம்பட செயல்பட்டுவருகிறது.

தமிழ்நாடு இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்கிறது. இதனை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் மாநிலஅரசு பல்வேறு கல்வித்திட்டங்களை தீட்டி வருகிறது. பெண்களின் உயர்கல்வியினை ஊக்குவிக்க புதுமை பெண் என்கிற மூவளர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் உயர்கல்வி உறுதி திட்டம், அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு, ஐஐடி, ஐஐஎம், போன்ற உயர்கல்வி நிலையங்களில் பயில நிதிஉதவி திட்டம் போன்றவற்றின் மூலமாக அனைவரும் உயர்கல்வி பயில தமிழ்நாடு அரசு ஆவண செய்துவருகிறது.

நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு போன்ற பல்வேறு கல்வி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இவை தமிழக எல்லையை தாண்டி அனைத்து மாநில அரசுகளும் உன்னிப்பாக கவனிக்கும் திட்டமாக அமைந்துள்ளது.

எந்த சூழ்நிலையிலும் யாராலும் பறிக்க முடியாத ஒரே சொத்து கல்வி. கல்விச் செல்வத்தை வழங்குவது ஒரு மாநில அரசின் கடமை. எனவே, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வருவதன் மூலம், மாநில அரசின் இத்தகைய முயற்சிகளை ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்தபோது, கல்வி முதலில் மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டது. அவசர காலத்தின் போது மட்டுமே அது பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஒன்றிய அரசு, குறிப்பாக பிரதமர், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சமூகத்திற்கு சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்ற காந்தியடிகளின் கூற்றுக்கு ஏற்ப முற்போக்கு சிந்தனையுடன் அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ் சமூகத்தை கட்டமைக்க இளைஞர்களாகிய உங்களை வேண்டுகிறேன். உண்மை ஒழுக்கம், வாக்குத்தவராமை, அனைவருக்கும் சமமான நீதி, மத நல்லிணக்கம், வகுப்பு ஒற்றுமை சிறுபான்மையினர் நலம், தனி நபருக்கான மதிப்பு, ஏழைகள் நலன், அகிம்சை, தீண்டாமை விளக்கு, அதிகார குவிகளை எதிர்த்தல், ஏகபோகத்துக்கு எதிர்ப்பு, சுதந்திரமான சிந்தனை, அனைவர் கருத்துக்கும் மதிப்பளித்தல், கிராம முன்னேற்றம் இவைதான் காந்தியதின் அடைப்படைகள்.

இவை அனைத்தும்தான் இந்தியாவை ஒற்றுமை படுத்தும் விழுமியங்கள். இவற்றை கடைபிடிப்பதன் மூலமாக காந்தியின் பெயரை செல்ல நம்மை நாம் தகுதிப்படுத்தி கொள்வோம். இந்த பெருமை மிகு விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது பெரும் மகிழ்ச்சிக்குரியதாயும். இசைஞானி என்ற பெருமை மிகு பட்டத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் இசை உலகத்தின் மாமேதையான இளையராஜாவையும், மிருதங் வித்துவான் உமையாள்புரம் சிவராமனையும், பட்டம் பெற்றுள்ள அனைவரையும் வாழ்த்துகிறேன்.

காந்திய நெறிமுறைகளாய் கடைபிடிப்பவர்களாக, பரப்புரை செய்பவர்களாக, நடந்து காட்டுபவர்களாக இளைய சமுதாயம் - மாணவர்கள் இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை நீங்கள் சாதித்துக் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையோடு என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:
#கல்வி  # பட்டமளிப்பு விழா  # மாநிலப் பட்டியல்  # மாநில அரசு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..