பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை எளிதாக கற்கும் முறை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை எளிதாக கற்கும் முறை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!
By: TeamParivu Posted On: January 06, 2023 View: 59

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி  மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி எளிதாக கற்கும் முறையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (06.01.2023) தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-62, சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச்சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் காட்சிப்படுத்தும் சாதனம் (Visual Presenter) மற்றும் வரைப்பட்டிகை (Wireless Tablet) ஆகிய ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி எளிதாக கற்கும் முறையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (06.01.2023) தொடங்கி வைத்தார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 18 சென்னைப் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைப்பட்டிகை ஆகிய ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்கள் ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை சென்னை உயர்நிலைப்பள்ளி, கொய்யாத்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர்நிலைப்பள்ளி, இருசப்பா தெரு சென்னை உயர்நிலைப்பள்ளி மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்னை நடுநிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் முறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனைத் தொடங்கி வைக்கும் விதமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் இன்று (06.01.2023) சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச்சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்ப முறைகளை பள்ளிகளில் பயன்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, மாணவர்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு, பொதுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை சுலபமாக மாணவர்கள் எதிர்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர்கள் எஸ்.மதன்மோகன், பி.ஶ்ரீராமுலு , மாமன்ற உறுப்பினர் ரா. ஜெகதீசன், ரியான் டெக் நிறுவன இயக்குநர் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:
#தொழில்நுட்பச்சாதனங்கள்  # கற்றல்திறன்  # உதயநிதிஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..