50 நாட்களில் 3,200கி.மீ தூரம் நதியில் பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்..!!

50 நாட்களில் 3,200கி.மீ தூரம் நதியில் பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்..!!
By: TeamParivu Posted On: January 13, 2023 View: 89

கங்கை நதியில் உலகின் மிகப் பெரிய கங்கா விலாஸ் கப்பல் சேவை பிரதமர் மோடி காணொளியில் தொடங்கி வைத்தார். 

50 நாட்களில் 3,200கி.மீ தூரம் நதியில் பயணம் செய்யும் வகையில் கங்கா விலாஸ் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரணாசியிலிருந்து திப்ரூகர் வரை நதிநீர் வழித்தடத்தில் கங்கா விலாஸ் கப்பல் சேவை இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.கங்கை நதியில் உலகின் மிக நீளமான நதி கப்பல் சேவையின் ஆரம்பம் ஒரு முக்கிய தருணம். இது இந்தியாவில் சுற்றுலாவின் புதிய யுகத்தை அறிவிக்கும் என்று  பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

வாரணாசியில் இருந்து திப்ருகர் வரை 27 நதிகளின் வழியாக 50 நாட்களில் 3,200 கி.மீ தூரம் செல்லும் உலகின் மிக நீண்டதூர சொகுசு கப்பல் பயணத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து அசாமின் திப்ருகர் வரை வங்கதேசம் வழியாக கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளில் 50 நாட்கள் பயணிக்கும் சொகுசு நதிக் கப்பல் நாளை தனது முதல் பயணத்தை தொடங்குகின்றது.

உலகின் மிக நீண்டதூர நீர்வழிப்பாதை சொகுசு கப்பல் பயணமாக கருதப்படும் இதற்காக ‘எம்வி கங்கா விலாஸ்’ என்ற சொகுசு கப்பல் பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியா, வங்கதேசத்தில் உள்ள 5 மாநிலங்களில் 27 ஆறுகளைக் கடந்து 3, 200 கி.மீ தூரம் வரை இந்த கப்பல் பயணிக்க உள்ளது. உலகின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், வனச்சரணாலயங்கள் உள்ளிட்ட 50 சுற்றுலாத் தலங்களை இந்த கப்பலில் பயணிக்கும் பயணிகள் பார்த்து ரசிக்க முடியும்.

வாரணாசியில் தொடங்கும் கப்பல் பயணம் பீகாரின் பாட்னா, ஜார்க்கண்டின் சாஹிப்கன்ஞ், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, வங்கதேசத்தில் தாகா, அசாமில் கவுகாத்தி ஆகிய நகரங்கள் வழியாகச் செல்கிறது. வாரணாசியில் இருந்து பயணத்தை தொடங்கும் இந்தக் கப்பல் மார்ச் 1-ம் தேதி திப்ருகார் சென்று அடையும். இந்த கப்பலில் இசை, கலாசார நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, 5 ஸ்டார் ஓட்டல் போன்ற உணவு விடுதிகள் என பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த கப்பலானது 62 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்டதாகும். 3 தளங்களை கொண்ட இந்த கப்பலில் 36 சுற்றுலா பயணிகள் தங்க 18 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கங்கா விலாஸ் கப்பலின் பயணத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ரிவர் க்ரூஸ் லைனர் எம்வி கங்கா விலாஸில் உள்ள பயணிகளிடம் நீங்கள் கற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் இந்தியா கொண்டுள்ளது என்று கூற விரும்புகிறேன். இது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிறைய உள்ளது. இந்தியாவை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது. இந்தியாவை இதயத்திலிருந்து மட்டுமே அனுபவிக்க முடியும், ஏனென்றால் இந்தியா அனைவருக்கும் இதயத்தைத் திறந்துள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். 3200 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் எம்.வி.கங்கா விலாஸ் ஆற்றுப் பயணத்தின் தொடக்கமானது, நாட்டின் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் வளர்ச்சிக்கு ஒரு வாழ்க்கை உதாரணம். 24 மாநிலங்களில் 111 தேசிய நீர் நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று தொடங்கும் நதிக் கப்பல், காசியையும் அஸ்ஸாமையும் இணைக்கும் என்பதால், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கப்பலில் வரும் பயணிகள் மா காமாக்யா கோயில், காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் பிற இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹெச்பி சர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களில், எம்.வி.கங்கா விலாஸ் கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் வாரணாசி மற்றும் அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று கலாச்சாரத்தை அனுபவித்தனர். மாநிலத்தில் 5 புதிய ஜெட்டிகளை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். காசி இன்று புதிய அடையாளத்துடன் முன்னேறி வருகிறது என்று உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Tags:
#சொகுசுகப்பல்  # கங்காவிலாஸ்  # பிரதமர்மோடி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..