இன்னும் 6 மாதத்திற்குள் மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் அமல்படுத்தப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..!!

இன்னும் 6 மாதத்திற்குள் மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் அமல்படுத்தப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: March 03, 2023 View: 59

இன்னும் 6 மாதத்திற்குள் மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக கடந்த சட்டசபை தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில், முக்கியமானதாக மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளித்திருந்தது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பெண்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழக அரசும், இப்போ, அப்போ என்று கூறி வருகிறது.

நிதிநிலை தற்போது சரியில்லை, இதனால் தமிழ்நாட்டின் நிதிநிலை சரி செய்ததும் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் சமீபத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் இம்மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். நிதிநிலை சரியாக இருந்திருந்தால் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டிருக்கும் என்றும் நிதிநிலை சரியாக இல்லாததால் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியிருந்தார்.

மேலும், மகளிர் உரிமைத்தொகை குறித்து நீங்களே மறந்தாலும் நான் மறக்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டார். இந்த சமயத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் வாரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்த நிலையில், நாமக்கல்லில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இல்லத்திருமண விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 மாதத்திற்குள் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளார் என அறிவித்துள்ளார்.

Tags:
#மகளிர்  # உரிமைத்தொகை  # தமிழ்நாடுஅரசு  # அமைச்சர்  # உதயநிதிஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..