நீட் தேர்வுக்கு அடுத்த நாளான +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : காலை 9.30 மணி அளவில் மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்..!!

நீட் தேர்வுக்கு அடுத்த நாளான +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : காலை 9.30 மணி அளவில் மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்..!!
By: TeamParivu Posted On: April 26, 2023 View: 62

மே 8ம் தேதி காலை 9.30 மணி அளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முடிவுகள் வெளியீடு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,

“மேல்நிலை இரண்டாமாண்டு (+2)-மார்ச்/ஏப்ரல் 2023- பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் 08.05.2023 (திங்கட்கிழமை)காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்

தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge.tn.gov.in

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்:

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.குறிப்பிட்டுள்ள கைப்பேசி பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் எண்ணுக் தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
#பொதுத்தேர்வு  # முடிவுகள்  # அரசு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..