அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு..!

அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு..!
By: TeamParivu Posted On: May 03, 2023 View: 66

மூத்த அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகள் அடிக்கடி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகி வருகின்றன. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இந்த அமைச்சரவை கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி குடியரசு தலைவர் தமிழ்நாடு வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:
#சென்னை  # முகஸ்டாலின்  # மூத்தஅமைச்சர்கள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..