PMMVY திட்டம் : மத்திய அரசு கொடுக்கும் 5000 ரூபாய் நிதியுதவி..!

PMMVY திட்டம் : மத்திய அரசு கொடுக்கும் 5000 ரூபாய் நிதியுதவி..!
By: TeamParivu Posted On: May 03, 2023 View: 65

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது கருவுற்றிருக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்ட மத்திய அரசின் முக்கிய திட்டமாகும்.

கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் மருத்துவச் சிகிச்சை மற்றும் மருந்துச் செலவுகளுடன் தொடர்புடைய நிதிச் சுமையைத் தணிக்க இத்திட்டம் உருவாக்கப்பட்டது உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிப்பது மூலம் இந்தியாவில் கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின்
ஊட்டச்சத்து குறைபாடுகளை தீர்க்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

PMMVY திட்டம் எவ்வாறு செயல்படுகிறது: PMMVY திட்டத்தின் கட்டமைப்பிற்குள் இணையும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சுமார் 5,000 ரூபாயை பணத்தை அவர் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மூன்று தவணையாக பிரித்து Direct Benefit Transfer (DBT) திட்டத்தின் மூலம் டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்த 5000 உதவி தொகையின் ஆரம்ப தவணையாக ரூ.1,000 கர்ப்பப் பதிவின் போது வழங்கப்படுகிறது, இரண்டாவது தவணை ரூ.2,000 கர்ப்ப காலத்தில் ஆறாவது மாதத்தில் குறைந்தபட்சம் ஒரு பரிசோதனையைத் செய்தப்பின்பு வழங்கப்படுகிறது. குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிறகு மூன்றாவது மற்றும் இறுதி தவணையாக ரூ.2,000 வழங்கப்படுகிறது.

PMMVYக்கு யார் தகுதியானவர்? : PMMVY திட்டத்தின் கீழ் பலன் பெறவேண்டுமெனில் அடிப்படை தகுதியாக தினசரி ஊதியம் பெறும் அல்லது பொருளாதார ரீதியாக கீழ்மட்டத்தில் இருக்கும் பெண்களாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஊதிய இழப்பின் தாக்கத்தை குறைப்பதும், இந்த முக்கியமான காலகட்டத்தில் பெண்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சையை பெறுவதை உறுதி செய்வதும் தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டம் எந்தவொரு மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களுடன் பணியாற்றும் பெண்களுக்கு கிடைக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மேலும், முதல் குழந்தைக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்பதையும் மறந்து விடக்கூடாது. PMMVY திட்டத்தின் மூலம் இந்தியாவில் தாய்வழி ஆரோக்கியத்தில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதிச் சலுகைகள் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியைக் குறைத்துள்ளன. இது அவர்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துச் செலவுகளின் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைத்துள்ளது.

Tags:
#PMMVYதிட்டம்  # பிரதான்மந்திரி  # மத்தியஅரசு  # நிதியுதவி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..