தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – களம் நமதே என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கு மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு..!!

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – களம் நமதே என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கு மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு..!!
By: TeamParivu Posted On: May 09, 2023 View: 63

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – களம் நமதே எனும் பெயரில் மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கமலஹாசன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்குபற்றும் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக, விழா குழுவினர், ‘களம் நமதே’ எனும் பெயரில் இந்த போட்டிக்காள கருப்பொருள் பாடலை உருவாக்கினர். இதனுடன் இந்த போட்டிக்கான பிரத்யேக இலச்சினையும் உருவாக்கினர். இந்தப் பாடலையும், லச்சினையும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட, இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் எம். எஸ். தோனி பெற்றுக் கொண்டார். இதன் போது தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகரும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மாநில விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

தமிழகத்தில் சர்வதேச அளவிலோ அல்லது தேசிய அளவிலோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றால்… அதற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு, மக்களிடம் சென்றடையும் வகையில் வித்தியாசமான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் முதவ்வர் இலச்சினை, சின்னம் வெளியீட்டு விழா சென்னை வீலா பேவளில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் முகஸ்டாலின், சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி, அமைச்சர்கள் உதய நிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில், முதலமைச்சர் கோப்பை என்ற பெயரில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிலம்பம், கபடி, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 50 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை இலச்சினை மற்றும் இணையதளத்தை தோனி தொடங்கிவைத்தார்.

அதேபோல், எஸ். தமன் இசையில், அருண் ராஜா காமராஜ் பாடல் வரிகளில் தமிழக முதல்வர் டிராபி தீம் பாடலும் வெளியாகி வைரலானது. இதுகுறித்து, இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடுகருமான கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை களம் நமதே!’ எனும் பெயரில் மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக மக்கள் இந்தப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் களம் நமதாகட்டும் என்று கமலஹாசன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:
#கோப்பைகளம்நமதே  # தமிழ்நாடு  # கமலஹாசன்  # மாணவர்கள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..