சென்னை: ஜனநாயக விழுமியங்களை காப்பாற்ற இருவரும் இணைந்தே நடப்போம் என்று ராகுல்காந்திக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 54வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதனையொட்டி, காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்பட பல தரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், ராகுல் காந்திக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களைக் காப்பாற்ற நம் முன் நெடும் பயணம் காத்திருக்கிறது. இருவரும் இணைந்தே நடைபோடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:
#மு.க.ஸ்டாலின்