உடல் பரிசோதனை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உடல் பரிசோதனை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
By: TeamParivu Posted On: July 04, 2023 View: 78

சென்னை: வழக்கமான மருத்துவ சோதனைகளுக்காக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்பினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.. இதைத்தவிர, அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர், அனுமதிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘வழக்கமான மருத்துவ சோதனைகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து முதல்வர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’’ என கூறப்பட்டது. அறிக்கையின் படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

Tags:
#அப்போலோ மருத்துவமனை  #முதல்வர் மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..