டெல்லியில் ஜூலை 11-ம் தேதி 50-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

டெல்லியில் ஜூலை 11-ம் தேதி 50-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
By: TeamParivu Posted On: July 07, 2023 View: 68

டெல்லி: ஜூலை 11-ம் தேதி 50-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சார்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். ஜிஎஸ்டி கவுன்சிலில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தில் நிதித்துறை செயலாளர், வணிகவரித்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 49-வது கூட்டம் கடந்த பிப்ரவரியில் கூடியது. இக்கூட்டத்திற்கு நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். இந்நிலையில் இக் கவுன்சிலின் 50வது கூட்டம், வரும் ஜூலை 11-ம் தேதி டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் கூடுகிறது. கட்டமைப்பு, வரி விலக்கு விதிகள், ஜிஎஸ்டி படிவங்களை வழங்குவதற்கான கடைசி தேதி, வரி சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் கடைசி தேதி மற்றும் இந்தியாவில் உள்ள சில மாநிலங்களுக்கான குறிப்பிட்ட சலுகைகள். ஜிஎஸ்டியின் நிலையான விகிதமானது இந்தியா முழுவதும் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளுக்குப் பொருந்தும் என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஜிஎஸ்டி அதிகாரிக்கு உள்ளது.
டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி ஜி.எஸ்.சி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிமென்ட், ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஜி.எஸ்.டியை அதிகரிப்பது உள்ளிட்டவை பற்றி முடிவு எடுக்க வாய்ப்புயுள்ளது. பன்னோக்கு பயன்பாட்டு வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை மறு ஆய்வு செய்வது குறித்து முடிவு எடுக்கப்பட வாய்ப்புயுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஆன்லைன் கேமிங் மற்றும் வர்த்தகம் குறித்தும், அதற்கான வரி விதிப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளில் ஏதாவது மாற்றம் தேவை என்பது குறித்து கருத்துகள் பகிரப்படும். இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2017-ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் வரி விதிப்பு விகிதம் பல முறை மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு வரி விதிக்கப்படும் என்றும், தற்போது வரி விதிக்கப்பட்டுள்ள வரி விகிதத்தில் மாற்றம் தேவையா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

Tags:
#ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..