உங்க வீட்டு EB பில் இந்த முறை எவ்வளவு. யூனிட்டை போட்டு நீங்களே ஈஸியாக அறியலாம் சிம்பிள் வழிமுறை

உங்க வீட்டு EB பில் இந்த முறை எவ்வளவு. யூனிட்டை போட்டு நீங்களே ஈஸியாக அறியலாம் சிம்பிள் வழிமுறை
By: TeamParivu Posted On: September 27, 2023 View: 69

தமிழில் புரட்டாசி மாதமான இது, சில நாள் மழை,சில நாட்கள் வெயில் என மாறி மாறி இருக்கிறது.இதுதான் கிளைமேட் என்று யூகிக்க முடியாத நிலை இருககிறது. இதனால கரெண்ட் பில் எப்படி வரும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. எனவே இபி பில் எப்படி வரும் என்பதை நீங்களே கண்டுபிடிக்க எளிய வழியைத்தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

செப்டம்பர் மாதத்தின் பின்பகுதியான இது , கொஞ்சம் வித்தியாசமான மாதம், கிட்டத்தட்ட தென்மேற்கு பருவ மழை முடியும் தருவாயில் உள்ளது. அக்டோபர் இரண்டாவது வாரத்தில் அதாவது வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிடும். பொதுவாக புரட்டாசி மாதம் வெயிலும் மழையும் கலந்து இருக்கும். கிளைமேட்டை புரிந்து கொள்ளவே முடியாது.

இந்த சூழலில் மின் கட்டணம் திடீரென ஒரு நாள் அதிகரிக்கும்.திடீரென ஒரு நாள் குறையும். ஒரு நாள் இரண்டு போனை போடுவோம். ஏசி வைத்திருப்பவர்கள் ஏசியை புல்லாக ஒரு நாள் வைக்க வேண்டிய நிலை வரும். ஒரு நாள் ஏசியை அப்படியே ஆப் பண்ண வேண்டியஅளவிற்கு குளிரும் இருக்கும்.இப்படி மாறி மாறி கிளைமேட் இருப்பதால் நமது உடம்பே எப்படி இருக்கலாம் என்பதில் குழம்பி போய் இருக்கும். இந்த சூழலில் மின்சார பில்லும் சரியாக எப்படி வரும் என்பது நமக்கு தெரியாது.

இது ஒருபுறம் எனில் பல இடங்களில் டிஜிட்டல் மீட்டர்கள் பொறுத்திவிட்டார்கள். எனவே அங்கெல்லாம் ரீடிங் கணக்கிடப்பட்டு பில் மெசேஜாக வந்துவிடுகிறது. இப்படியான சூழலில் உங்கள் மின் கட்டணத்தை எப்படி நீங்களே கணக்கிடுவது..உங்கள் கரண்ட் பில் எவ்வளவு வந்துள்ளது. எப்படி மின்வாரிய அதிகாரிகள் மின் கட்டணத்தை கணக்கிடுகிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

பொதுவாக உங்கள் மீட்டர் வீடுகளுக்கான மின்சார வரைமுரையி்ல் தான் இருக்கும். அதாவது வீடுகளுக்கு domestic current usage என்ற முறை தான் கட்டணம் வசூலிக்க பின்பற்றப்படும். அதன்படி மின்சாரங்களுக்கான கட்டண அளவுகளை பார்க்கலாம்.

தமிழகத்தில் மக்களுக்கு முதல் 100 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதனால் 100 யூனிட்டுகளுக்கு பூஜியம் ரூபாய் மட்டுமே கட்டணம். அதற்கு பிறகு 101 200 யூனிட்டுகள் வரை 2.25 ரூபாய் ஒரு யூனிட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பிறகு இந்த வரிசையில் கட்டணம் இருக்கும். 201 400 யூனிட்டுகள் வரை = ₹ 4.50/ யூனிட், 401 500 யூனிட்டுகள் வரை = ₹ 6.00/ யூனிட், 500 யூனிட்டுகள் வரை இந்த கட்டணங்கள் இருக்கும். ஆனால் 500 யூனிட்டுகளுக்கு மேலே போனால் கட்டண முறை அப்படியே வேறுமாதிரி ஆகிவிடும். அதாவது 1 100 யூனிட்டுகள் வரை = ₹ 0.00 / யூனிட் ஆகவும், 101 400 யூனிட்டுகள் வரை = ₹ 4.50 / யூனிட் ஆகவும் இருக்கும். இதில் 401 500 யூனிட்டுகள் வரை = ₹ 6.00 / யூனிட் ஆகவும், 501 600 யூனிட்டுகள் வரை = ₹ 8.00 / யூனிட் ஆகவும், 601 800 யூனிட்டுகள் வரை = ₹ 9.00 / யூனிட் ஆகவும் இருக்கும். 801 1000 யூனிட்டுகள் வரை = ₹ 10.00 / யூனிட் ஆகவும், 1000 க்கு மேலே போனால் ஒரு யூனிட்டுக்கு ₹ 11.00 வசூலிக்கிறது தமிழ்நாடு மின்சா வாரியம்.

இப்படியான சூழலில் உங்கள் மின்சார அளவை கணக்கிட மின்சார வாரிய பழைய ரீடிங் அட்டையை இதற்கு பயன்படுத்தலாம். அதில் ஆட்கள் வந்து எடுக்கும் வழக்கம் உள்ள இடத்தில் கடைசியாக எடுத்து சென்ற ரீடிங் எப்போது என்று பாருங்கள். கடந்த 2 மாதங்களில் எடுத்து இருந்தால் அதை வைத்து உங்கள் கடைசி மீட்டர் ரேடிங் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இப்போது மீட்டரில் என்ன ரீடிங் வருகிறது என்று பார்த்து கழித்து எத்தனை யூனிட்டுகள் என்பதை கணக்கிட்டு மேலே சொன்ன விலையின் படி பிரித்துக் கணக்கிட்டால் உங்கள் பில் தொகையை அறியலாம். ஒருவேளை மின் அட்டை உங்கள் வீட்டு மீட்டர் பாக்ஸில் இல்லை என்றால், tneb இந்த அதிகார பூர்வ https://www.tnebnet.org/awp/login இணையதளத்தில் புதிய அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி உங்கள் மீட்டர் எண்ணை உங்கள் கணக்கோடு இணைக்க வேண்டும்.. அப்போது கடந்த காலத்திற்கு உரிய பில்கள், ரீடிங் பதிவுகள் ரீடிங் எடுக்கப்பட்ட தேதி பில் கட்டும், கட்டிய நாட்களை அறியலாம்.

அதில் உங்கள் கடைசி மீட்டர் ரேடிங் என்ன என்பதைத் அறியலாம். அதன்பின்னர் இப்போது ட்டரில் என்ன ரீடிங் வருகிறது என்று பார்த்து கழித்து எத்தனை யூனிட்டுகள் என்பதை கணக்கிட்டு மேலே சொன்ன விலையின் படி பிரித்துக் கணக்கிட்டால் உங்கள் கரெண்ட் பில் என்ன என்பது தெரிந்துவிடும். ஒருவேளை இந்த முறையில் கணக்கு போட சிரமமாக உள்ளது என்றால், https://www.tnebnet.org/awp/tariffMaster?execution=e1s2 என்ற வெப்சைட்மூலமும் எளிதாககணக்கிட்டு அறியலாம்.


  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..