தடாலாடியாக குறைந்த தங்கம் விலை நகை கடைக்கு இப்பவே ஓடுங்க..!

தடாலாடியாக குறைந்த தங்கம் விலை நகை கடைக்கு இப்பவே ஓடுங்க..!
By: TeamParivu Posted On: September 27, 2023 View: 60

தங்கம் விலை எப்படா குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் இன்று ஒரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டு உள்ள பாதிப்பால் தங்கம், வெள்ளி விலையில் பெரும் ஓட்டை விழுந்துள்ளது.

அமெரிக்க பங்குச்சந்தை நேற்று மோசமான நிலையை அடைந்த நிலையில் பத்திர சந்தையில் அதிகப்படியான முதலீடு குவிந்துள்ளதன் மூலம் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாபம் பல வருட உச்சத்தை தொட்டு உள்ளது. இதேபோல் அமெரிக்க டாலர் மதிப்பும் 6.5 மாத உயர்வை எட்டியுள்ளது. இதன் விளைவு தங்கம், வெள்ளி விலையில் பெரும் சரிவு.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்று 1915 டாலர் விலையில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகப்படியான முதலீடு பத்திர சந்தைக்கு திரும்பியதால் தங்கம் விலை 1896 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 20 சதவீதம் சரிந்து 58,318 ரூபாய்க்கும், வெள்ளி விலை 1 கிலோ 0.52 சதவீதம் சரிந்து 71,401 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது. இதேவேளையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து குறைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 250 ரூபாய் குறைந்து 54,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 270 ரூபாய் குறைந்து 59,780 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 200 ரூபாய் குறைந்து 43,840 ரூபாயாக உள்ளது. 1 கிலோ வெள்ளி விலை 600 ரூபாய் உயர்ந்து 77000 ரூபாயாக உள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 54,800 ரூபாய், மும்பை - 54,500 ரூபாய், டெல்லி - 54,650 ரூபாய், கொல்கத்தா - 54,500 ரூபாய், பெங்களூர் - 54,500 ரூபாய், ஹைதராபாத் - 54,500 ரூபாய், கேரளா - 54,500 ரூபாய், புனே - 54,500 ரூபாய், பரோடா - 54,550 ரூபாய், அகமதாபாத் - 54,550 ரூபாய், ஜெய்ப்பூர் - 54,650 ரூபாய், லக்னோ - 54,650 ரூபாய், கோயம்புத்தூர் - 54,800 ரூபாய், மதுரை - 54,800 ரூபாய்.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 59,780 ரூபாய், மும்பை - 59,450 ரூபாய், டெல்லி - 59,600 ரூபாய், கொல்கத்தா - 59,450 ரூபாய், பெங்களூர் - 59,450 ரூபாய், ஹைதராபாத் - 59,450 ரூபாய், கேரளா - 59,450 ரூபாய், புனே - 59,450 ரூபாய், பரோடா - 59,500 ரூபாய், அகமதாபாத் - 59,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 59,600 ரூபாய், லக்னோ - 59,600 ரூபாய், கோயம்புத்தூர் - 59,780 ரூபாய், மதுரை - 59,780 ரூபாய்.

  • 1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 43840 ரூபாய், மும்பை - 43600 ரூபாய், டெல்லி - 43720 ரூபாய், கொல்கத்தா - 43600 ரூபாய், பெங்களூர் - 43600 ரூபாய், ஹைதராபாத் - 43600 ரூபாய், கேரளா - 43600 ரூபாய், புனே - 43600 ரூபாய், பரோடா - 43640 ரூபாய், அகமதாபாத் - 43640 ரூபாய், ஜெய்ப்பூர் - 43720 ரூபாய், லக்னோ - 43720 ரூபாய், கோயம்புத்தூர் - 43840 ரூபாய், மதுரை - 43840 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 77000 ரூபாய், மும்பை - 74200 ரூபாய், டெல்லி - 74200 ரூபாய், கொல்கத்தா - 74200 ரூபாய், பெங்களூர் - 73500 ரூபாய், ஹைதராபாத் - 77000 ரூபாய், கேரளா - 77000 ரூபாய், புனே - 74200 ரூபாய், பரோடா - 74200 ரூபாய், அகமதாபாத் - 74200 ரூபாய், ஜெய்ப்பூர் - 74200 ரூபாய், லக்னோ - 74200 ரூபாய், கோயம்புத்தூர் - 77000 ரூபாய், மதுரை - 77000 ரூபாய்


  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..