ரூ.1.12 லட்சம் வரை சம்பளம் 10ம் வகுப்பு, டிகிரி முடித்தாலே போதும்! சென்னை என்ஐஆர்டியில் நல்ல வேலை

ரூ.1.12 லட்சம் வரை சம்பளம் 10ம் வகுப்பு, டிகிரி முடித்தாலே போதும்! சென்னை என்ஐஆர்டியில் நல்ல வேலை
By: TeamParivu Posted On: September 30, 2023 View: 60

சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், லேப் அட்டென்டென்ட் பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.18 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.1.12 லட்சம் வரையிலான சம்பளத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஐசிஎம்ஆர் எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council Of Medical Reserch or ICMR) செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலின் கீழ் என்ஐஆர்டி எனும் சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Research in Tuberculsis) இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: காலியிடங்கள்: சென்னை என்ஐஆர்டி-யில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (குரூப் - பி) பணிக்கு 60 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் லேப் அட்டென்டென்ட் - I (குரூப் - சி) பணிக்கு 13 பேர் என மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மைக்ரோபயாலஜி, பயோ டெக்னாலஜி, மெடிக்கல் லேப் டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, மெடிக்கல் பயோ கெமிஸ்ட்ரி, கிளினிக்கல் பார்மகோலாஜி, பயோ மெடிக்கல் சயின்ஸ்சஸ், மெடிக்கல் லேபாராட்டரி டெக்னாலஜி, ஸ்டேட்டிஸ்டிக்ஸ், அப்ளைட் ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பயோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, பார்மஸி, சைக்கலாஜி, சோசியல் வொர்க், ரோடியோகிராபி, மெடிக்கல் டெக்னாலஜி, வெட்னரி சயின்சஸ் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். என்ஜினியரிங்: இல்லாவிட்டால் என்ஜினியரிங் பிரிவில் பயோஇன்பர்மெட்டிக்ஸ், லைப்சயின்சஸ், பயோ மெடிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆட்டோமொபைல், படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளேமா பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

லேப் அட்டென்டென்ட்: இந்த பணிக்கு 10ம் வகுப்பு முடித்து ஆய்வகத்தில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் 10ம் வகுப்பு முடித்து பிளம்பர் பணியில் ஓராண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு என்ன: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் என்ன: இதில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும். லேப் அட்டென்டென்ட் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரையும் சம்பளமாக வழங்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் www.nirt.res.in அல்லது www.icmr.nic.in ஆகிய இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோர் சிபிடி(Computer Based Test) மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.


Tags:
##JOB# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..