பேமென்ட் கேட்வே வங்கி கணக்கிலிருந்து ரூ.16,180 கோடியை அலேக்காக தூக்கிய ஹேக்கர்கள்..!!

பேமென்ட் கேட்வே வங்கி கணக்கிலிருந்து ரூ.16,180 கோடியை அலேக்காக தூக்கிய ஹேக்கர்கள்..!!
By: TeamParivu Posted On: October 09, 2023 View: 60

உலகம் முழுவதும் டிஜிட்டல் திருட்டுகள் அதிகமாக நடக்க துவங்கியிருக்கும் வேளையில், இந்தியாவிலும் லாக்டவுன் காலத்தில் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய நிறுவனங்கள் தனது தகவல் பாதுகாப்பை மேம்படுத்திய காரணத்தால் ஹேக்கிங் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் பேமென்ட் கேட்வே சேவை வழங்கும் ஒரு நிறுவனத்தின் கணக்கை ஹேக் செய்து சுமார் 16,180 கோடி மதிப்பிலான பணத்தை மோசடி செய்ததாகக் தானே காவல் நிலையில் இந்த நிறுவனம் முக்கியமான நப்ரகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த திருட்டு ஒரே நாளில் நடக்கவில்லை, சில பல வருடங்களாக பலரின் கூட்டு முயற்சியில் யாருக்கும் தெரியாமல் நடந்துள்ளது. மேலும் இந்த மோசடியாளர்கள் கூட்டம் பணத்தை வெவ்வேறு வங்கி கணக்குகளில் இருந்து திருடியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளதாக தானே காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கூறியது. முதலில் நிறுவனத்தின் கணக்கு ஹேக் செய்யப்பட்டு 25 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக தான் புகார் அளிக்கப்பட்டது, ஆனால் இதை அடிப்படையாக வைத்து விசாரணை செய்யும் போது 16,180 கோடி மதிப்பிலான பணத்தை மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பணத்தை இழந்த பேமெண்ட் கேட்வே நிறுவனம் தனது புகாரில் சஞ்சய் சிங், அமோல் ஆண்டலே என்னும் அமன், கேதார் என்னும் சமீர் திகே, ஜிதேந்திர பாண்டே மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்), 409 (குற்றவியல் நம்பிக்கை மீறல்), 467, 468 (forgery), 120B (குற்றச் சதி) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின் கீழும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணம் ஆயிரக்கணக்கான வங்கிக் கணக்குகளில் பிரித்து போடப்பட்டு, அதை மேலும் பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது


Tags:
## 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..