வளைகுடாவில் தமிழ்நாட்டின் ஒரே கிராமத்தினரே ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான வேலை ஆச்சர்யமான தகவல்

வளைகுடாவில் தமிழ்நாட்டின் ஒரே கிராமத்தினரே ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான வேலை ஆச்சர்யமான தகவல்
By: TeamParivu Posted On: October 09, 2023 View: 56

திருநெல்வேலி: பொதுவாக வெளிநாட்டு வேலைகளை பொறுத்தவரை கிராமத்தில் ஒருவர் போய்விட்டால், அந்த துறையில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நல்ல சம்பளம் கிடைக்கும் என்று தெரிந்தால், தன்னுடைய உறவினர்கள், நண்பர்களை அப்படியே அழைத்துக் கொள்வார்கள். அப்படித்தான் வாகைகுளம் என்ற கிராமத்தில் ஒரு துறையில் ஆளுமையாக ஜொலிப்பதாக சொல்கிறார்கள்.

பொதுவாக தமிழ்நாட்டை பொறுத்தவரை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தினர் வெளிநாடுகளில் அதிகமாக வேலை செய்வார்கள். இதேபோல், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டத்தினரும் கணிசமாக வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள்.

இவர்கள் எல்லாருமே வெளிநாடுகளில் வேலைக்கு அதிக அளவில் செல்ல காரணம் என்னவென்று பார்த்தால்,விவசாயத்தை தவிர அங்கு வேறுஎதுவும் இருக்காது. படித்து முடித்தவர்கள் வேலை கிடைக்காத நிலையில் வெளிநாடு சென்றிருப்பார்கள். இதுதான் எதார்த்தம்..

ஆனால் பலரும் வெளிநாடுகளில் வேலைக்கு எப்படி சேர்ந்திருப்பார்கள்..இது ஒரு சங்கிலி தொடர் நிகழ்வு.. ஒருவர் கஷ்டப்பட்டு நேர்முகத் தேர்வில் வென்று போய் இருப்பார். அதன்பிறகு அங்கு எந்த மாதிரியான வேலைககு டிமாண்ட் இருக்கிறது என்பதை அறிந்து, முதலில் தன் உறவினரை அழைத்து வந்திருப்பார். அவர் தன் உறவினரை அழைத்து வந்திருப்பார். இப்படி சங்கிலித்தொடராக பலரும் வெளிநாடுகளில் வேலைக்கு போய் இருப்பார்கள். ஒருவர் முன்னேறியதுடன், அவர் சார்ந்தவர்களையும், அதே படிப்பு படிக்க சொல்லி வேலைக்குஇழுப்பது தமிழகத்தில் அதிகமாக இருக்கும். அப்படி பல கிராமங்கள் மினி சிங்கப்பூர் போல் தமிழகத்தில் இருக்கின்றன. ஊரில் உள்ள பலரும் வெளிநாட்டில் வேலைபார்ப்பார்கள். படித்து முடித்த உடனே, அவர்களும் வெளிநாட்டில் வேலைக்கு செல்வார்கள்.இந்நிலையில் வாகைகுளம் என்ற கிராமத்தினர், அரபு நாடுகளில், வளைகுடா நாடுகளில் ஆயில் மற்றும் கேஸ் துறையில் பீல்ட் ஆப்ரேட்டர் பணிகளில் அதிக அளவில் இருப்பதாக சொல்கிறார்கள்.

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆயில் மற்றும் கேஸ் உற்பத்தி துறையில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்..நான் பணி செய்த வளைகுடா நாடுகள், தென் அமெரிக்க மற்றும் வட மற்றும் North Sea,போன்ற அனைத்து இடங்களிலும் ஒரு புரியாத புதிராக இருக்கும் விசயம். Field operator பணியில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஊரை சார்ந்தவர்களே அதிகமாக உலகத்தில் எந்த ஒரு Offshore platform,FPSO,FLNG ஆகியவற்றில் கண்டிப்பாக ஒரு வடக்கன்குளத்தை சார்ந்த Field Operator இருப்பார்.அவர்களின் பழகும் முறை சற்றே வித்தியாசமாக இருக்கும். இதைப்பற்றி நீண்ட காலம் ஆராய்ந்து சில விசயங்களை தெரிந்துக்கொண்டேன்" என்று கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த இன்னொரு நெட்சடின் ஆமா... அந்தந்த கோர்ஸஸ் பத்தின இன்பர்மேஷன , அவங்க ஊர் ஆளுங்களுக்கு ஈசியா கடத்திடறாங்க" என்றார். அதற்கு அவர் 5000 RS க்கு field operator கோர்ஸ் நடத்துறாங்க..எல்லா Oil & gas கம்பெனியிலுமே Dip in Chemical or B.E தான் மினிமம் தேவை. ஆனா இவங்களோட கல்வி and அனுபவம் எல்லாம் ஒரே புதிராக இருக்கும்.." என்றார்.

இதேபோல் எலிவேட்டர் லிப்ட் துறையில் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் அதிகம் 90% பங்கு வகிப்பது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சார்ந்தவர்கள் இருப்பார்கள் என்று சொன்னார் இன்னாரு நெட்டிசன்.. இவர்கள் சொல்வது போலவே..தேனிமாவட்டத்தில் கோவிந்தநகரம் என்ற கிராமம் உள்ளது. அங்கு பலரும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். ஒருவர் வெற்றி பெற் றஉடன் அவர்கள் செய்யும் முக்கியமான தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் அதே வழியை காட்டுகிறார்கள். அவர்களும் முன்னேறுகிறார்கள். வசதியான வாழ்க்கை, சொகுசு வீடுகள், லட்சங்களில் பண புழக்கம் என மினி சிங்கப்பூர் போல் பல கிராமங்கள் தமிழகத்தில் மாறுவதற்கு உதவி செய்யும் குணமே காரணம் ஆகும்.


Tags:
##tamilnadu# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..