100 கோடி இந்தியர்களை நெருங்கும் ஆபத்து தப்பிப்பது கஷ்டமாம் எச்சரிக்கும் ஆய்வாளர்கள்! என்னாச்சு

100 கோடி இந்தியர்களை நெருங்கும் ஆபத்து  தப்பிப்பது கஷ்டமாம் எச்சரிக்கும் ஆய்வாளர்கள்! என்னாச்சு
By: TeamParivu Posted On: October 10, 2023 View: 72

சர்வதேச அளவில் பதற்றமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்து ஒன்று காத்திருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில காலமாகவே சர்வதேச அளவில் அடுத்தடுத்து பதற்றமான சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. இதனால் சர்வதேச அளவிலும் கூட பாதிப்புகள் எதிரொலிக்கிறது. உலக நாடுகளும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில் இந்தியா மிகப் பெரிய ஆபத்தில் உள்ளதாகவும் குறிப்பாக டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள மக்கள் மிகப் பெரிய ஆபத்தில் உள்ளதாக வல்லுநர்கள் புது அலர்ட் கொடுத்துள்ளனர்.

மிகப் பெரிய பிரச்சினை: இதற்கிடையே பருவநிலை மாற்றம் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இப்போது மாறியுள்ளது. இந்த காலநிலை மாற்றம் புவி வெப்பமடைதல் காரணமாக இந்தியா உள்ளிட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் பெரிய பிரச்சினை ஏற்படப் போகிறதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதிகளில் மாரடைப்பு மற்றும் வெப்ப பக்கவாதம் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் அது பூமியில் பேராபத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மனித உடல்களால் அதீத வெப்பத்தைத் தாங்க முடியாது. வெப்பம் அதிகரிக்கும் போது மனிதர்கள் மத்தியில் அது வெப்ப பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்ற உடல்நலப் பாதிப்புகளை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவுக்கு ஆபத்து: பூமியின் வெப்பம் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் அது மொத்தம் 200 கோடி மக்களை ஆபத்தில் தள்ளும் என எச்சரித்துள்ளனர். குறிப்பாக 100 கோடி இந்தியர்களை இது கடுமையாக பாதிக்குமாம். இது தவிர பாகிஸ்தான், கிழக்கு சீனா, ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளில் இதனால் வெப்பம் பல மடங்கு அதிகரிக்கும். குறிப்பாக டெல்லி, கொல்கத்தா, ஷாங்காய், முல்தான், நான்ஜிங் மற்றும் வுஹான் ஆகிய நகரங்களில் ஆண்டுதோறும் வெப்ப அலை ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

பாதிப்பு ஏற்படும் பெரும்பாலான நாடுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளாக உள்ளன. இதனால் இங்குள்ள மக்கள் பலரால் தங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க ஏசி உள்ளிட்ட கருவிகளைக் கூட வாங்க முடியாமல் போகலாம் என்றும் இதனால் பாதிப்பு மேலும் மோசமாகவே இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. உலகெங்கும் பாதிப்பு: அதேபோல பூமியின் வெப்பம் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் அது அமெரிக்காவிலும் கடும் பாதிப்பை ஏற்படுமாம்.. புளோரிடாவிலிருந்து நியூயார்க் மற்றும் ஹூஸ்டனில் இருந்து சிகாகோ வரை பாதிப்புகள் மோசமாக இருக்கும். தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் வெப்பம் தாங்கவே முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இருப்பினும், ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் வளரும் நாடுகளிலேயே பாதிப்பு மோசமாக இருக்குமாம். இணை நோய் உள்ளவர், வயதானவர்கள் இதில் உயிரிழக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். அதாவது பணக்கார நாடுகளுடன் ஒப்பிடுகையில் வளரும் நாடுகளிலேயே பாதிப்புகள் மோசமாக இருக்கும். வல்லுநர்கள் சொல்வது என்ன: இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "பருவநிலை பாதிப்பிற்கு முக்கிய க்ரீன் ஹவஸ் வாயு வெளியேற்றம் தான். இது வளரும் நாடுகளைக் காட்டிலும் வளர்ந்த நாடுகளில் இருந்தே அதிகம் வருகிறது. இருப்பினும், இந்த காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது என்னவோ ஏழை மற்றும் வளரும் நாடுகள்தான்.. இதனால் பல கோடி ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களில் பலர் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் பணக்கார நாடுகளிலும் சில பாதிப்புகள் இருக்கவே செய்யும். இந்த பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்றெல்லாம் இல்லை. கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைத்தால் போதும். கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதைச் செய்தாலே போதும் எளிதாக நாம் காலநிலை மாற்றத்தைக் குறைக்க முடியும்" என்று தெரிவித்தனர்.


Tags:
##INDIA# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..