மகுடத்தை இழக்கும் எல்ஐசி சாமானிய மக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்..!!

மகுடத்தை இழக்கும் எல்ஐசி சாமானிய மக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்..!!
By: TeamParivu Posted On: October 10, 2023 View: 68

இந்திய மக்கள் தங்களுடைய எதிர்கால தேவைக்கும், தங்களுக்கு பின் குடும்பத்தை பாதுகாக்கவும் அதிகளவில் நம்பி ஆயுள் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்ய தேர்வு செய்யும் ஒரு நிறுவனம் மத்திய அரசால் நிர்வாகம் செய்யப்படும் எல்ஐசி நிறுவனம் தான்.

இந்த நிலையில் எல்ஐசி தனது மகுடத்தை இழக்கிறதா என்ற கேள்வி தற்போதைய டேட்டா-வை பார்க்கும் போது எழுகிறது. என்ன நடந்தது..? சாமானிய மக்கள் எல்ஐசி நிறுவனம் குறித்து என்ன தெரிந்துக்கொள்ள வேண்டும்..?

ஆயுள் காப்பீட்டுத் துறையில் மாதாந்திர அடிப்படையில் புதிய பிஸ்னஸ் பிரீமியத்தில் (NBP) லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் பங்கு செப்டம்பர் 2022 இல் 68.25 சதவீதமாக இருந்த நிலையில் 2023 செப்டம்பர் மாதத்தில் 58.50 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் எல்ஐசி நிறுவனத்தின் சந்தை பங்கீடு 9.75 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. புதிய பிஸ்னஸ் பிரீமியம் என்பது புதிதாக வாங்கப்பட்ட பாலிசியில் கிடைக்கும் ப்ரீமியம் தொகை, இது ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சியை கணக்கிடும் முக்கிய காரணியாக விளங்குகிறது. இந்த நிலையில் new business premium (NBP) பிரிவில் எல்ஐசி பங்கீடு குறைக்கிறது எனில் சந்தைக்கு தேவையான ப்ராடெக்ட்-கள் குறைவாக இருப்பதும், விநியோகத்தில் குறைபாடுகள இருப்பதை காட்டுகிறது.

ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 57.37 சதவீத சந்தைப் பங்கீட்டில் இருந்து தற்போது 58.50 சதவீதமாக இருப்பது கணிசமான உயர்வை காட்டுகிறது. லைஃப் இன்சூரன்ஸ் கவுன்சில் அமைப்பால் வெளியிடப்படும் தரவுகள் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரையிலான மாதாந்திர வணிகத் தரவுகள் படி, எல்ஐசியின் NBP அளவு 92,462.62 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த வருடத்தில் இதே காலக்கட்டத்தில் 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, ஆயுள் காப்பீட்டுத் துறையின் NBP அளவு 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 13 சதவீதம் குறைந்து 1.59 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே உள்ளது. எல்ஐசி பங்கீட்டின் சரிவுக்கு முக்கிய காரணம் குறைந்த விற்பனை மற்றும் போட்டித்தன்மை இல்லாத ப்ராடெக்ட்களின் பற்றாக்குறை, இன்சூரன்ஸ் ப்ராடெக்ட்களின் அம்சங்கள் மற்றும் விலையில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகியவை எல்ஐசியின் சந்தைப் பங்கின் சரிவுக்கு வழிவகுத்தது என்று காப்பீட்டு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு 2022 செப்டம்பரில் 31.75 சதவீதத்திலிருந்து 2023 செப்டம்பரில் 41.50 சதவீதமாக நிலையான அதிகரிப்பைக் கண்டது. இதன் மூலம் ஆயுள் காப்பீட்டு துறையில் பெரிய அளவிலான வளர்ச்சியை தனியார் மற்றும் பிற நிறுவனங்கள் பெற்று வருகிறது. உதாரணமாக HDFC Life Insurance நிறுவனத்தின் NBP அளவு 6.07 சதவீதத்தில் இருந்து 8.31 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் NBP பங்கீடு 7.19 சதவீதத்தில் இருந்து 10.27 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் ICICI Prudential Life Insurance, Bajaj Allianz Life Insurance, Max Life Insurance ஆகியவை கிட்டதட்ட 1 சதவீதம் வரையிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.


Tags:
##LIC# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..