படபடவென கொட்டப்பொகும் கனமழை டார்கெட் 15 மாவட்டங்கள்! சென்னையிலும் டமால் டுமீல் சம்பவம் இருக்கு

படபடவென கொட்டப்பொகும் கனமழை  டார்கெட் 15 மாவட்டங்கள்! சென்னையிலும் டமால் டுமீல் சம்பவம் இருக்கு
By: TeamParivu Posted On: October 10, 2023 View: 59

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் என்றும், சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் என்றும், சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

12.10.2023 முதல் 16.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஆட்சியர் அலுவலகம் திருப்பூர், 11, திருவாடானை (ராமநாதபுரம்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 9, சேலம் 8, திருப்பூர் PWD, சோழவந்தான் (மதுரை), குன்னூர் (நீலகிரி) தலா 7, கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 6, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம், தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), வெள்ளக்கோயில் (திருப்பூர்), வாடிப்பட்டி (மதுரை) தலா 5, கிருஷ்ணகிரி, பர்லியார் (நீலகிரி), தாராபுரம் (திருப்பூர்), வைகை அணை (தேனி), வீரபாண்டி (தேனி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), மூலனூர் (திருப்பூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 4, தாளவாடி (ஈரோடு), காங்கேயம் (திருப்பூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஊத்துக்குளி (திருப்பூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கொடுமுடி (ஈரோடு), அணைகெடங்கு (கன்னியாகுமரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), கிளன்மார்கன் (நீலகிரி), அரண்மனைப்புதூர் (தேனி), சத்தியமங்கலம் (ஈரோடு), கோத்தகிரி (நீலகிரி), பெருந்துறை (ஈரோடு), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), குண்டடம்

திருப்பூர்) தலா 3, கேத்தி (நீலகிரி), ஓமலூர் (சேலம்), பெரியபட்டி (மதுரை), ஆண்டிபட்டி (மதுரை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), சிட்டம்பட்டி (மதுரை), பவானி (ஈரோடு), அழகரை எஸ்டேட் (நீலகிரி), எட்டயபுரம் (தூத்துக்குடி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), பாலமோர் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), பழனி (திண்டுக்கல்), சூலகிரி (கிருஷ்ணகிரி), விரகனூர் அணை (மதுரை), உதகமண்டலம் (நீலகிரி), அவினாசி (திருப்பூர்), காட்பாடி (வேலூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), பவானிசாகர் (ஈரோடு) தலா 2, சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), மணியாச்சி (தூத்துக்குடி), இடையப்பட்டி (மதுரை), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), ராஜபாளையம் (விருதுநகர்), கல்லிக்குடி (மதுரை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), உப்பாறு அணை (திருப்பூர்), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), திருப்பூர் தெற்கு, கடல்குடி (தூத்துக்குடி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), குமாரபாளையம் (நாமக்கல்), திருமூர்த்தி IB (திருப்பூர்), அன்னூர் (கோயம்புத்தூர்), தல்லி (கிருஷ்ணகிரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கின்னக்கோரை (நீலகிரி), கோடநாடு (நீலகிரி), வல்லம் (தஞ்சாவூர்), குப்பணம்பட்டி (மதுரை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), குருங்குளம் (தஞ்சாவூர்), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), கவுந்தப்பாடி (ஈரோடு), அதனக்கோட்டை (புதுக்கோட்டை),

வரட்டுப்பள்ளம் (ஈரோடு), கல்லந்திரி (மதுரை), திற்பரப்பு (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), மேல் பவானி (நீலகிரி), உசிலம்பட்டி (மதுரை), பாலக்கோடு (தர்மபுரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), கெத்தை (நீலகிரி), நாமக்கல் தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: அரபிக்கடல் பகுதிகள்: 10.10.2023: லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:
##RAIN# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..