சீக்ரெட் கோட்! வாட்ஸ்அப் கொண்டு வரும் புது வசதி!

சீக்ரெட் கோட்! வாட்ஸ்அப் கொண்டு வரும் புது வசதி!
By: TeamParivu Posted On: October 10, 2023 View: 118

வாட்ஸ் அப் நிறுவனம் தனது செயலியில் கூடுதல் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வர முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இது நாம் வாட்ஸ்அப் பயன்படுத்தும் முறையையே புரட்டிப் போடப் போகிறது.

இப்போது உலகில் அதிக நபர்களால் பயன்படுத்தக் கூடிய சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. என்ன தான் டெலிகிராம், வீ சாட் என பல செயலிகள் இருந்தாலும் அவை வாட்ஸ்அப் அறுகே நெருங்கக் கூட முடிவதில்லை.

இதற்கு வாட்ஸ்அப் தனது பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதே முக்கிய காரணமாகும். குறிப்பாகப் பாதுகாப்பு விஷயத்தில் அது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

புது அம்சம்: அதன்படி குறிப்பிட்ட சாட்களை மட்டும் பிங்கர் பிரிண்ட், ஃபேஸ்லாக் பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்யும் வசதியை வாட்ஸ்அப் கடந்த மே மாதம் அறிமுகம் செய்தது. இதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே வாட்ஸ்அப் புதிதாக சீக்ரெட் கோட் என்ற புதிய அம்சத்தை டெஸ்டிங் செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் சாட்களை தனிப்பட்ட பாஸ்வோர்ட் மூலம் பாதுகாக்க முடியும். அடுத்து வரும் v2.23.21.9 வாட்ஸ்அப் அப்டேட்டில் இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த சீக்ரெட் கோட் அம்சம் பயனாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. சீக்ரெட் கோட்: வாட்ஸ்அப்பில் மேலே இருக்கும் search barஇல் நமது பாஸ்வேர்ட்டை போட்டு ரகசிய சாட்களை ஓபன் செய்யலாம். ஒரு சாதனத்தில் இந்த சீக்ரெட் கோடை போட்டால் போதும். நாம் எந்த சாதனத்தில் வாட்ஸ்அப்பில் லாகின் செய்தாலும் பாஸ்வோர்ட் போட்டால் மட்டுமே சீக்ரெட் சாட்டிற்கு செல்ல முடியும்.

தற்போது டெஸ்டிங்கில் யாருக்கும் இந்த வசதி வரவில்லை என்றாலும் கூட மிக விரைவில் வாட்ஸ்அப் இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய வசதி ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் என்று அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கும். இதன் மூலம் தனிப்பட்ட சாட்களை லாக் செய்து வைக்கலாம். இதன் மூலம் நமது மொபைல் வேறு யாராவது கைகளுக்குச் சென்றாலும் கூட அவர்களால் நமது சாட்களை படிக்க முடியாது.

எப்படி வேலை செய்கிறது: நாம் எந்த சாட்டை இதில் லாக் செய்ய வேண்டுமோ அதை முதலில் தேர்வு செய்ய வேண்டும். பிறகு சீக்ரெட் கோட் ஆப்ஷனில் சென்று பாஸ்வேர்ட்டை பதிவிட்டு லாக் செய்துவிடலாம். அடுத்த முறை வாட்ஸ்அப் ஓபன் செய்யும் போது search barஇல் நாம் அந்த சீக்ரெட் கோட் பாஸ்வேர்ட்டை போட்டால் மட்டுமே நம்மால் குறிப்பிட்ட சாட்களுக்கு செல்ல முடியும். இதில் நாம் குறிப்பிட்ட வார்த்தை, எண்கள், அவ்வளவு ஏன் ஸ்மைலிக்களை கூட சீக்ரெட் கோட்டாக வைக்கலாம்.

வாட்ஸ்அப்பில் ஏற்கனவே இருக்கும் வசதியைக் காட்டிலும் இது பல மடங்கு கூடுதல் பாதுகாப்பைத் தரும். தற்போதுள்ள பாதுகாப்பு அம்சத்தின்படி அனைத்து சாட்களுக்கும் நம்மால் ஒரு பாஸ்வோர்ட்டை தான் போட முடியும். ஆனால், இந்த சீக்ரெட் கோட் அம்சத்தில் ஒவ்வொரு சாட்டிற்கும் தனித்தனி பாஸ்வோர்ட் வைக்கலாம். இதன் மூலம் ஒரு பாஸ்வேர்ட் லீக் ஆனாலும் கூட மற்ற சாட்கள் பாதுகாப்பாகவே இருக்கும். இந்த புதிய பாதுகாப்பு அம்சம் நிச்சயம் ஒரு கேம் சேஞ்சராகவே இருக்கும் எனப் பலரும் கருதுகிறார்கள்.


Tags:
##WHATSAPP# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..