கோபி நயினார் இயக்கும் ‘கருப்பர் நகரம்’

கோபி நயினார் இயக்கும் ‘கருப்பர் நகரம்’
By: TeamParivu Posted On: November 09, 2023 View: 36

சென்னை: நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மனுஷி’ படத்தை இயக்கினார். வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்த அந்தப் படம் பற்றிய தகவல் பின்னர் வெளியாகவில்லை.
இந்நிலையில், கோபி நயினார் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘கருப்பர் நகரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தலைப்பு அறிவிப்பு போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..