23,800mAh பேட்டரி, 200MP கேமரா..! முரட்டுத்தனமான லுக்கில் யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3.!

23,800mAh பேட்டரி, 200MP கேமரா..! முரட்டுத்தனமான லுக்கில் யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3.!
By: TeamParivu Posted On: November 14, 2023 View: 77


சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான யுனிஹெர்ட்ஸ் (Unihertz), அதன் புதிய யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

பலரும் அறியாத சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான யுனிஹெர்ட்ஸ் (Unihertz), மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை விட சற்று தனித்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்த நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட்போன், ஒரு முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன் ஆகும். இதன் முரட்டுத்தனமான வடிவமைப்பு மற்றும் அதிக திறன் கொண்ட பேட்டரி, இந்த ஸ்மார்ட்போன்களை தனித்து நிற்க வைக்கிறது.

அந்தவகையில், யுனிஹெர்ட்ஸ் தற்போது ஓரு புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 எனப்படும் இந்த ஸ்மார்ட்போன், நிறுவனத்தின் டேங்க் சீரிஸில் 3 வது மாடல் ஆகும். இது டேங்க் 3 ஆனது ஓர் 5ஜி மொபைல் ஆகும். ஆனால் இதற்கு முந்தைய மாடல்கள் ஆன டேங்க், டேங்க் 2 ஆகியவை 4ஜி ஆகும்.

டிஸ்பிளே

இந்த முரட்டு தனமான ஸ்மார்ட்போனில் 1080 x 2460 பிக்சல் ஹை-ரெசல்யூஷன் கொண்ட 6.79 இன்ச் எஃப்எச்டி+ எல்சிடி டிஸ்பிளே உள்ளது.  ஐபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

ஸ்பிளாஸ், நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான ஐபி68 ரேட்டிங் உள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போனை 1.5மீட்டர் ஆழத்தில் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் வரை நீருக்கு அடியில் வைத்திருக்க முடியும். சுமார் 5 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் ஒன்றும் ஆகாது.

பிராசஸர்

யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 ஆனது மீடியாடெக்கின் டைமண்ட்சிட்டி 8200 சிப்செட்டை கொண்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 13 மூலம் இயங்குகிறது. இதில் சிறப்பு அம்சங்களாக பிங்கர் பிரிண்ட் சென்சார், 40 மீட்டர் லேசர் ரேஞ்சு பைண்டர், ஐஆர் பிளாஸ்டர், 1200 லுமன் எல்இடி லைட் போன்றவைகள் உள்ளன. இந்த வெளிச்சம் 220 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தை அடையும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.

கேமரா

கேமராவைப் பார்க்கையில் ட்ரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதன்படி, 200 எம்பி பிரைமரி கேமரா, 50 எம்பி வைட் ஆங்கிள் மற்றும் 64 எம்பி நைட் விஷன் கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபிக்காக 50 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வைஃபை 6, புளூடூத் 5.3, டூயல் சிம், என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களும் உள்ளன.

பேட்டரி

666 கிராம் எடையுள்ள இந்த முரட்டுத்தனமான ஸ்மார்ட்போனில், மற்ற ஸ்மார்ட்போன்களில் இருக்கக்கூடிய பேட்டரியை விட, பெரிய அளவிலான 23,800 mAh திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

இதை 90 நிமிடங்களில் 90% சார்ஜ் செய்யலாம். ஒருமுறை சார்ஜ் செய்யதால் 1,800 மணி நேரம் பயன்படுத்தலாம். இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் ரிவெர்ஸ் சார்ஜிங் செய்ய முடியும்.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 ஆனது 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. 16 ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்ளது. எஸ்டி கார்டு மூலம் 2 டிபி வரை ஸ்டோரேஜைக் உயர்த்திக் கொள்ள முடியும். இந்த வேரியண்ட் விலை 499 அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பின்படி பார்க்கையில், ரூ.42,800 என்ற விலையில் அலிஎக்ஸ்பிரஸ் தளத்தில் விற்பனைக்கு உள்ளது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..