தாங்க முடியாத கஷ்டம் தற்கொலைக்கு முயன்றேன்! தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா கண்ணீர்!

தாங்க முடியாத கஷ்டம் தற்கொலைக்கு முயன்றேன்! தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா கண்ணீர்!
By: TeamParivu Posted On: November 18, 2023 View: 51


பிரபல தனியார் தொலைக்காட்சியான சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா. இவர் அலைபாயுதே, எங்கள் அண்ணா, அழகு நிலையம், புலிவால் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்து இருக்கிறார். இப்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்வர்ணமால்யா தன்னுடைய வாழ்வில் நடந்த கஷ்ட்டமான சம்பவங்களை கண்ணீர் விட்டு கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு சின்ன வயசிலேயே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் அந்த திருமண வாழ்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. கிட்டத்தட்ட என்னுடைய 21 வயதில் எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. விவகாரத்துக்கான காரணத்தை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இந்த விவகாரத்தால் நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இதில் என்னை விட என் பெற்றோர் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் படிப்பில் கவனம். பிறகு இந்த வேதனையில் இருந்து மீள வேண்டும் என்றால் நாம் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் அப்போது தான் இதில் இருந்து விடுபடலாம் என நினைத்தேன். இந்த முறிவு மற்றும் சண்டையால், நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த சமயத்தில் எல்லாம் வாழ்க்கை என்றால் இப்படி தான் இருக்குமா? இப்படி பட்ட ஒரு வாழ்க்கையில் நாம் ஏன் வாழ வேண்டும்?என்று  வெறுப்படைந்தேன்.

ஒரு கட்டத்தில் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பிறகு வேதனையில் ஒரு முறை நான் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சி செய்து இருக்கிறேன். என்னுடைய தங்கை தான் அதில் இருந்து வெளிய கொண்டு வர எனக்கு உதவினார். அவளால் என்னுடைய  உடல்நிலையைப் பார்க்க முடியவில்லை. பிறகு என்னை மருத்துவரிடம் அழைத்துச்சென்றாள்.

மருத்துவர்களும் அதில் இருந்து மீண்டு வர எனக்கு சில அறிவுரைகளை கூறினார்கள். இந்த மன உளைச்சலில் இருந்து மீள இரண்டு மாதங்கள் ஆனது” என கண்ணீருடன் தனது சோக கதையை ஸ்வர்ணமால்யா பகிர்ந்து கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் கவலை வேண்டாம் எல்லா கவலையையும் விடுங்கள் என தங்களுடைய ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..