உலகக்கோப்பை தொடர் ஆட்டநாயகன் விருதுக்கு 4 இந்திய வீரர்கள் தேர்வு … யார் யார் தெரியுமா..?

உலகக்கோப்பை தொடர் ஆட்டநாயகன் விருதுக்கு 4 இந்திய வீரர்கள் தேர்வு … யார் யார் தெரியுமா..?
By: TeamParivu Posted On: November 18, 2023 View: 58


நடப்பு உலகக்கோப்பைக்கான தொடர் ஆட்டநாயகன் விருது வெல்வதற்காக தேர்வு செய்யப்பட்ட 9 வீரர்கள் பட்டியலை நேற்று ஐசிசி வெளியிட்டது.

அரையிறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளில் இருந்து ஒன்பது வீரர்கள் ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 4 இந்திய வீரர்களும்,  2 ஆஸ்திரேலிய வீரர்களும், 2 நியூஸிலாந்து வீரர்களும் மற்றும் ஒரு தென்னாப்பிரிக்கா வீரர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி நாமினி பட்டியலில் இந்திய வீரர்களில், விராட் கோலி , முகமது ஷமி , ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் , ஆடம் ஜம்பா, நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் மற்றும் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்னர்.

ஆறு பேட்ஸ்மேன்:
பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் ஆறு பேட்ஸ்மேன் உள்ளனர். இதில் 5 பேர் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் உள்ளனர். அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 10 போட்டிகளில் 711 ரன்கள் குவித்துள்ளார். குயின்டன் டி காக் 594 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திர (578), டேரில் மிட்செல் (552) மற்றும் ரோஹித் சர்மா (550) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

6-வதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேக்ஸ்வெல் ஆவார். இவர் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடிக்கவில்லை ஆனால் 2 போட்டிகளில்  சாதனை படைத்து ஆஸ்திரேலிய அணியை அரையிறுதிக்கு தகுதி பெற முக்கிய வீரராக இருந்தார்.

மேக்ஸ்வெல் சாதனை:
மேக்ஸ்வெல் நடப்பு உலக கோப்பையில் மறக்க முடியாத இரண்டு போட்டிகளில் விளையாடி அசத்தார். அதன்படி அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடந்த நெதர்லாந்து அணிக்கு எதிராக 40 பந்துகளில் சதம் விளாசி அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதன் பின்னர் நவம்பர் 7-ம் தேதி அன்று மும்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் 128 பந்துகளில்  201 ரன்கள் எடுத்தார். 

இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

3 பந்துவீச்சாளர்கள்:
இந்த பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 3 வீரர்களும்  நடப்பு உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய  வீரர்கள் பட்டியலில் உள்ளனர். ஷமி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும்,  ஆடம் ஜம்பா 22  விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்திலும், அதே நேரத்தில் பும்ரா 18 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

 தொடர் ஆட்டநாயகன் விருது வாங்கிய இந்தியர்கள்:
ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 2023, யுவராஜ் சிங் 2011 ஆகிய உலகக்கோப்பைகளில் தொடர் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..