‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்ட தளபதி 68 படக்குழு!

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்ட தளபதி 68 படக்குழு!
By: TeamParivu Posted On: November 18, 2023 View: 41

துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சதீஷ், ஹீரோவாக ‘நாய் சேகர்’ என்ற வெற்றிப் படத்தை வழங்கிய பின்பு, தற்போது இரண்டாவது படத்தை வழங்க தயாராகி உள்ளார். ஹாரர்-காமெடி படமாக உருவாகியுள்ள அந்த படத்திற்கு ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியான நிலையில், இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இந்த் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நேற்று படத்தின் இரண்டாம் பாடலை அறிவிக்கும் வகையில், வித்தியாசமாக கவனம் ஈர்க்கும் வகையில், ஒரு ப்ரோமோவை வெளியிட்டு இருந்தனர். அதில், தளபதி 68 திரைப்படம் அப்டேட் கேட்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் அறிவித்தபடி, இன்று “கான்ஜூரிங் கண்ணப்பன்” படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர். இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பாடலை ‘தளபதி 68’ படக்குழுவான இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா, பிரேம் ஜி, நடிகர் வைபவ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..