தனது பிறந்தநாளையொட்டி அமைச்சர் உதயநிதி, தனது தந்தையும் முதலமைச்சருமான
மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
இன்று தனது 46வது பிறந்தநாளை உதயநிதி ஸ்டாலின் கொண்டாடும்
நிலையில், அவருக்கு முத்தமிட்டு பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின்,
இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின்,
அயராது உழைக்கவும் அன்பின் வழி நடக்கவும் எந்நாளும்
வழிநடத்தும் தாய், தந்தையரின் வாழ்த்தை பெற்ற மகிழ்வான
ருணத்திலிருந்து இந்த நாளை தொடங்குவதில் மகிழ்ச்சி
என்று குறிப்பிட்டுள்ளார்.