மறைந்த முன்னான பிரதமர் விபிசிங் தனது ஆட்சிக்காலத்தில், காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தவர். அத்துடன் சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணாயில் பெயரையும் சூட்டினார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி.மண்டல் தலைமையில் கமிஷன் அமைத்து, 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால், அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்தினார். இந்நிலையில் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சமூக நீதி காவலரான வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.