தெலங்கானா சட்டமன்ற தேர்தல் 2023: கருத்துக்கணிப்பு முடிவுகள் யாருக்கு சாதகம்? செம ஆட்டம் கண்ட BRS!

தெலங்கானா சட்டமன்ற தேர்தல் 2023: கருத்துக்கணிப்பு முடிவுகள் யாருக்கு சாதகம்? செம ஆட்டம் கண்ட BRS!
By: TeamParivu Posted On: November 27, 2023 View: 32

விரைவில் நடைபெறவுள்ள தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி தீவிரமாக போராடி வரும் நிலையில், சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிர்ச்சியூட்டும் வகையில் வெளிவந்துள்ளன. யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமிருப்பதாகஇன்னும் 3 நாட்கள் தான். தெலங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்பிறகு டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேசிய அளவில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அதில் தென்னிந்தியாவில் இடம்பிடித்த ஒரே மாநிலம் தெலங்கானா மட்டும் தான். இம்மாநிலம் தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிரிய கட்சி தான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.ம்முறை ஹாட்ரிக் வெற்றி பெற தீயாய் வேலை செய்திருக்கிறது. தேசிய அரசியலில் தனக்கான முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும் என்று தன்னுடைய கட்சி பெயரையே மாற்றினார் சந்திரசேகர் ராவ். ஆனால் இவரை கண்டுகொள்ளாமல் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி என பலம் வாய்ந்த இரண்டு கூட்டணிகள் அமைந்துள்ளன. எனவே மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது.


சந்திரசேகர் ராவ் வியூகம்

அதிலும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு செல்வாக்கு பெற வாய்ப்புகள் இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராகி வரும் சந்திரசேகர் ராவ், அதற்கு அச்சாரமாக தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கான பணிகளையும் சரியான முறையில் செய்து முடித்திருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.சட்டமன்ற தேர்தல் 2023

இந்நிலையில் தான் தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த சூழலில் சவுத் ஃபர்ஸ்ட் என்ற இணையதளம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கருத்துக்கணிப்புகள் தான் இறுதி என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும். அந்த வகையில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கு இந்த முடிவுகள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கருத்துக்கணிப்பு முடிவுகள்

ஏனெனில் சவுத் ஃபர்ஸ்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 41 - 46 இடங்கள் தான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முதலிடத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சி. இதற்கு 57 - 62 இடங்கள் கிடைக்குமாம். தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க குறைந்தது 60 தொகுதிகள் தேவை. கருத்துக்கணிப்பின் படி பார்த்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.வாக்கு சதவீத நிலவரம்

ஒருவேளை ஆட்சி மாற்றம் வருமா என்ற கேள்வியை பலரும் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இது அம்மாநிலத்தில் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. மேலும் பாஜக 3 - 6 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் 6 - 7 இடங்களையும் கைப்பற்றக்கூடும். இதர கட்சிகள் 0 - 2 என வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தால் காங்கிரஸ் 42.5 சதவீதம், பாரதிய ராஷ்டிரிய சமிதி 37.6 சதவீதம், பாஜக 13.2 சதவீதம், ஏஐஎம்ஐஎம் 0.9 சதவீதம், இதர கட்சிகள் 5.8 சதவீதம் எனப் பெற்றுள்ளன.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..