அரசு பள்ளி மாணவர்கள் செம ஹேப்பி... 2 மாத டூர் பிளானுக்கு க்ரீன் சிக்னல்... KSRTC பலே ஏற்பாடு!

அரசு பள்ளி மாணவர்கள் செம ஹேப்பி... 2 மாத டூர் பிளானுக்கு க்ரீன் சிக்னல்... KSRTC பலே ஏற்பாடு!
By: TeamParivu Posted On: November 27, 2023 View: 94

அடுத்த இரண்டு மாதங்கள் அரசு பள்ளி மாணவர்கள் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடப்படும் நிலையில், சக்தி திட்டத்தால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசு பள்ளிகளின் தேவையை பூர்த்தி செய்யும்அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் வந்துவிட்டாலே ஒரே மகிழ்ச்சி தான். ஏனெனில் இந்த காலகட்டத்தில் தான் சுற்றுலாவிற்கு திட்டமிடுவர். பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்று மிகவும் பயனுள்ள வகையில் வசதிகளை செய்து தருவர். இது கல்வி ரீதியாகவும், பொழுதுபோக்கு ரீதியாகவும் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்அரசு பள்ளிகளில் கல்வி சுற்றுலா

அரசு பள்ளிகளில் கல்வி சுற்றுலா
சுற்றுலா பட்டியலில் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், சுற்றுலா தலங்கள், கேளிக்கை அரங்குகள் உள்ளிட்டவை இடம்பெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுற்றுலாவிற்கு தனியார் பேருந்துகளை பயன்படுத்தக் கூடாது என்று கர்நாடகா அரசு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. அதன்படி, KSRTC எனப்படும் மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவை இலவச சேவையாக அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் உற்சாகம்

மாணவர்கள் உற்சாகம்
டிசம்பர் 2022ல் மட்டும் 2.20 லட்சம் மாணவர்கள் மைசூரு அரண்மனையை சுற்றிப் பார்த்துள்ளனர். கடந்த ஆண்டு வரை அரசு பேருந்துகள் வசதியை பயன்படுத்திக் கொள்வதில் எந்தவித சிக்கலும் இல்லை. ஆனால் நடப்பாண்டு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு ”சக்தி திட்டத்தின்” கீழ் மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தது.

சக்தி திட்டத்தின் செயல்பாடுகள்

சக்தி திட்டத்தின் செயல்பாடுகள்
தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் முன்வைத்த விஷயம், ஆட்சிக்கு வந்ததும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பெண்கள் அதிக அளவில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. தினசரி 20 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இதன் காரணமாக மாநகரப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்வதற்கு போதிய அளவில் KSRTC பேருந்துகளை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு பேருந்துகள் ஒதுக்கீடு

அரசு பேருந்துகள் ஒதுக்கீடு
தற்போதைய சூழலில் பேருந்துகள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா சில கேள்விகளை எழுப்பியது. அதற்கு பதிலளித்த அவர்கள், கடந்த ஆண்டு வரை அரசு பேருந்துகளை புக்கிங் செய்வதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் தற்போது மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே கல்வி சுற்றுலாவை வேறு வழியின்றி ரத்து செய்யலாமா? என ஆலோசித்து வருவதாக கூறினர்.

போக்குவரத்து துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்

போக்குவரத்து துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்
அதேசமயம் மாற்று ஏற்பாடுகள் மூலம் கல்வி சுற்றுலாவிற்கு பேருந்துகளை ஒதுக்க KSRTC பிரத்யேக ஏற்பாடுகளை செய்து வருவதாக சில தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து முதலமைச்சர் சித்தராமையா மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோரை மாநில தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்துள்ளனர்.

சுற்றுலா செல்வதில் சிக்கல் இல்லைஇந்நிலையில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், நடப்பாண்டு அரசு பேருந்துகளை கல்வி சுற்றுலாவிற்கு ஒதுக்குவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இருக்கின்றன. பற்றாக்குறை ஏதும் இல்லை. வழக்கம் போல் போக்குவரத்து துறையிடம் விண்ணப்பித்து பேருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..